பொத்துவில் ஆதார வைத்தியசாலையின் குறைபாடுகள் நிவர்த்திக்கப்படும் கிழக்கு ஆளுனர் தெரிவிப்பு

அப்துல்சலாம் யாசீம்-

பொத்துவில் ஆதார வைத்தியசாலையின் குறைபாடுகளை மிக விரைவில் நிவர்த்திக்கப்படவுள்ளதாக கிழக்கு மாகாண ஆளுனர் ரோஹித போகொல்லாகம தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்தில் முக்கிய இடங்களில் ஒன்றான பொத்துவில் ஆதார வைத்தியசாலை மிகவும் குறைபாடுகளுடன் இயங்கி வருவதாகவும்,அவ்வைத்தியசாலையின் குறைபாடுகளை உடனடியாக தீர்த்து தருமாறும் வைத்தியசாலையின்
அபிவிருத்தி குழுவினர் தெரிவித்தனர்.

இதேவேளை கிழக்கு ஆளுனரிடம் மூன்று கோரிக்கைகளை முன்வைத்தனர்.அதில் வைத்தியசாலையில் சிற்றூழியர்கள் பற்றாக்குறையாகவுள்ளதாகவும்,வைத்தியர்களுக்கு தங்குமிட வசதிகள் இல்லையெனவும். வைத்தியசாலையை உடனடியாக அழகு படுத்த நடவடிக்கை எடுக்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

அதனையடுத்து கிழக்கு மாகாண ஆளுனர் ரோஹித போகொல்லாகம வைத்தியர்களின் தங்குமிட வசதியினை நிவர்த்திப்பதற்காக உடனடியாக வீடொன்றினை வாடகைக்கு பெற்று வைத்தியர்களுக்கு வழங்குமாறும் அவ்வீட்டுக்கான வாடகை பணத்தை சுகாதார அமைச்சு வழங்குவதாகவும் ஆளுனர் உறுதியளித்தார்.

அத்துடன் வைத்தியசாலையை அழகு படுத்துவதற்குறிய பெயின்ட் வகைகளை வழங்குவதாகவும் எதிர்வரும் காலங்களில் நியமனம் வழங்கும் போது சிற்றூழியர்களை நியமிப்பதாகவும் ஆளுனர் உறுதியளித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -