இலங்கை செஞ்சிலுவை சங்கம்,( SLRCS) திருகோணமலை கிளையினால் திருகோணமலை செயிண்ட்ஜோசப் கல்லூரியில் 10-11-2017 அன்று "அவசரகால டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கை" நடைமுறைபடுத்தப்பட்டது.
SLRCS தொண்டர்கள் கல்லூரிக்கு விஜயம் செய்து, டெங்கு பற்றி ஒரு விழிப்புணர்வு நிகழ்ச்சியைநடத்தியதுடன் தேர்ந்தெடுக்கப்பட்ட பாடசாலை மாணவர்களை பாடசாலையில் நுளம்பு இனப்பெருக்கம்செய்வதற்கான தண்ணீர் தங்கி நிற்கின்ற இடங்களை அவதானித்து தூய்மையாக்கும் திட்டத்தை செயல் படுத்துவதற்கு ஊக்குவிக்கப்பட்டார்கள்.
பாடசாலை துப்பரவு பணியை முடித்தபின், அவர்கள் தங்களது செயல் பற்றிய விளக்கத்தை, கல்லூரி அதிபருக்கும், இலங்கை செஞ்சிலுவை சங்க திருகோணமலை கிளை தலைவர் டாக்டர் ஈ. ஜீ.ஞானகுணாளன், கிளை நிறைவேற்று அதிகாரி டாக்டர். என். ரவிச்சந்திரன், மற்றும் கல்லூரி ஆசிரியர்களுக்கும், மற்றும் என்ன தீர்வு நடவடிக்கை எடுக்கப்பட்டது என விளக்கினார் கள்.
டெங்கு நோய், அறிகுறிகள், டெங்கு நோய் வராமல் எப்படி பாதுகாப்பாக இருத்தல் அவற்றின் பாதிப்பை எவ்வாறு தடுப்பது பற்றி SLRCS தலைவர் டாக்டர் ஈ. ஜீ. ஞானகுணாளன்,விளக்கி கூறினார்.
இது ஒரு தொடர்ச்சியான வேலைத்திட்டமாக இருக்கும் என்பதால், டெங்கு ஒருங்கிணைப்பாளர் - த. கஜரூபன் அவர்கள் SLRCS இன் எதிர்பார்ப்புகளை விளக்கினார், மேலும் தீவிரமாக பங்கேற்கும்படிகேட்டுக் கொண்டார். SLRCS பல்வேறு குப்பை, கழிவுப்பொருட்களை சேகரித்தல் மற்றும் பல்வேறுகழிவுகளை எவ்வாறு பிரிக்கலாம் என விளக்கினார்.
SLRCS சார்பாக, கிளை அலுவலக நிர்வாகி - டாக்டர். என் .ரவிச்சந்தன் கல்லூரி அதிபர் மற்றும்ஆசிரியர்களுக்கு நன்றி தெரிவித்தார்.



