அமீன் அருங்காவியம்” கவிதை நூல் வெளியீட்டு விழா







அஸீம் கிலாப்தீன்-

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவரும், நவமணி பிரதம ஆசிரியருமான என்.எம்.அமீன் பற்றி கவிஞர் மூதூர் எம்.எம்.ஏ.அனஸ் எழுதியுள்ள ‘அமீன் அருங்காவியம்’ கவிதை நூல் வெளியீட்டு விழா கடந்த 18 ஆம் திகதி சனிக்கிழமை காலை 9 மணிக்கு கொழும்பு 07,ஆனந்த குமாரஸ்வாமி மாவத்தை, புதிய நகர மண்டப கேட்பார் கூடத்தில் நடைபெற்றது

ஸ்ரீலங்கா முஸ்லிம் கலைஞர் முன்னணி மற்றும் அஸீஸ் மன்றம் இணைந்து நடத்தும் இந் நிகழ்வின் பிரதம அதிதியாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவரும் இந்திய லோக் சபையின் முன்னாள் உறுப்பினருமான முனிருல் மில்லத் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தனர்.

கௌரவ அதிதிகளாக தேசிய ஒருமைப்பாட்டு நல்லிணக்க இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் ஆகியோர் கலந்துகொண்டனர் .

சிறப்பு அதிதிகளாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மானில சிரேஷ்ட உப தலைவர் எம்.அப்துல் றஹ்மான் அஸீஸ் மன்ற தலைவர் அஷ்ரப் அஸீஸ் ஆகியோரும் தென்னிந்தியாவிலிருந்து மதிமுகம் தொலைக்காட்சி ஊடகவியலாளர் அஹமட் “பீயான் மணிச்சசுடர் ஊடகவியலாளர் சாஹுல் ஹமீத் ஆகியோர் கலந்துகொண்டனர் காவியாபிமானி கலைவாதி கலீல் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் நூலின் முதற்பிரதியை புரவலர் ஹாசீம் உமர் பெற்றுகொள்ளவுள்ளதோடு நூல் ஆய்வினை காப்பியக்கோ டாக்டர். ஜின்னா சரீப்தீன் நிகழ்தினார் .
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -