முஹம்மட் ஜெலீல், நிந்தவூர்-
நிந்தவூர் அஞ்சல் அலுவலகத்தின் நுழைவாயிலும் உட்புறமும் நீர் தேங்கிக் கிடப்பதனால் அங்குள்ள ஊழியர்கள் மிகவும் மனக் கசப்போடு பணியாற்றவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது அந்தவகையில் இன்று அஞ்சல் அலுவலக ஊழியர் ஒருவர் காகித பைகளை எடுத்துச் செல்லும்போது அங்கு நுழைவாயில் தேங்கிக் கிடந்த நீரில் விழுந்து காகிதங்கள் நனைந்து எழுக்கமுடியாத நிலை எற்பட்டுள்ளதாக அங்குள்ள ஊழியர்கள் தெரிவித்தனர்.
மேலும் ஊழியர்கள் கூறுகையில் தற்போது சிறிதளவு மழை பெய்த நாட்களில் இப்படி நீர் தேங்கிக் கிடந்தால் இனிவரும் பெரும் மழை காலங்களில் அலுவலகத்திற்கு எப்படி செல்வதென கேள்வியொன்றை முன்வைத்தார்கள் அத்தோடு இந்நிலை தொடர்பாக ஏற்கனவை நமதூர் அரசியல் அமைப்புக்களிடம் முறையிட்டதோடு ,நிந்தவூர் பிரதேச சபை மற்றும் பிரதேச செயலகங்களுக்கு கடிதமொன்றை கையழித்து இதுவரைக்கும் எந்த தீர்வும் கிடைக்கப்பெறவிலை அரச நிறுவனங்களின் நிலையே இப்படியென்றால் நிந்தவூரின் வேறு இடங்களின் நிலை எப்படியிருக்குமென ஊழியர்கள் மனம்நொந்து கூறுகின்றனர்.
ஆகவை மேலான அரசில் அமைப்புக்களே , இதற்கு பொறுப்பான அதிகாரிகளே நிந்தவூர் அஞ்சல் அலுவலகத்தின் நிலையை சற்று கவனத்தில்கொண்டு இதற்கு ஏற்றவாறு வடிகான்களை அமைக்குமாறு பணிவுடன் வேண்டுகின்றோம்.


