எம்.ஜே.எம்.சஜீத்-
தேசிய காங்கிரசின் பொத்துவில் மத்திய குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட ”காலம் கழியும் உண்மை ஒளிரும் சத்தியம் மட்டுமே நித்தியம்” எனும் வரலாற்று முக்கியத்துவமிக்க நிகழ்வு நேற்று (18) இரவு பொத்துவில் சின்ன உல்லை செண்டி பீச் ஹோட்டலில் நடைபெற்றது.
தேசிய காங்கிரசின் பொத்துவில் மத்திய குழுவின் அமைப்பாளர் ஏ. பதுர்கான் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அக்கட்சியின் தேசிய தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம்.அதாஉல்லா, முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை, கொள்கைபரப்புச் செயலாளர் சட்டத்தரணி எம்.எம்.பஹீஜ், உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது ஐக்கிய தேசிய கட்சியின் பொத்துவில் அமைப்பாளரும், பெரிய பள்ளிவாசல் தலைவருமான எஸ்.எம்.சுபையிர், தொழிலதிபர்களான எம்.எஸ். அன்சார், எஸ்.எம். முஹ்சீன், அல்-ஹாஜ் ஏ.முகைதீன் பாவா மௌலவி. அறுகம்பை அபிவிருத்தி போரத்தின் தலைவர் எம்.எச்.எம். ஜமாஹிம் உட்பட ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஐக்கிய தேசிய கட்சி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சிகளின் ஆதரவாலர்கள் பலரும் தேசிய காங்கிரசில் இணைந்துகொண்டனர்.