ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு கிழக்கின் முன்னாள் முதலமைச்சர் எழுதிய ஹாபிஸ் நசீர் கடிதம்

ழைய முறையிலேயே உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைத் தேர்தல்களை நடத்தக் கோரல்

நாட்டில் முன்னெப்போதும் இல்லாத வகையில் தற்போது தேர்தல்கள் பிற்போடப்பட்டு வருகின்றன,இது நல்லாட்சிக்கும் ஜனநாயகத்துக்கும் ஏற்புடையதல்ல என்பதை கருத்திற் கொண்டே இந்தக் கடிதத்தை எழுதுகின்றேன்,

உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைத் தேர்தல்கள் தொடர்ச்சியாக பிற்போடப்பட்டுள்ளதால் அரசியல் கட்சிகள் மற்றும் மக்கள் மத்தியில் பாரிய அதிருப்தியினைதோற்றுவித்துள்ளது,

அரசாங்கம் தற்போது அறிமுகப்படுத்த முயலும் கலப்பு தேர்தல் முறைமையில் பல்வேறு குளறுபடிகள் உள்ளதனாலேயே அதற்கு எதிராக அடிக்கடி மனுக்கள்தாக்கல் செய்யப்படுகின்றன.

தற்போது கூட கலப்பு தேர்தல் முறைமைக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதை நாம் அறிவோம்,

ஆகவே அது தொடர்பில் நீதிமன்றத்தின் தீர்ப்பு எப்போது வௌியாகி எப்போது தேர்தல்கள் நடக்கும் என்பது யாரும் அறியாத விடயம்.

அத்துடன் மக்களின் உயரிய உரிமையான வாக்குரிமையை பாதுகாப்பதற்கு அரசாங்கம் தவறியுள்ளது என்ற குற்றச்சாட்டும் பரவலாக முன்வைக்கப்பட்டு வருவதைநாம் இலகுவாக கருத முடியாது,

சர்வஜன வாக்குரிமை மறுக்கப்பட்டமை தொடர்பான கசப்பான அனுபவத்தை கிழக்கு மாகாண மக்கள் கடந்த சில தசாப்தங்களாக உணர்ந்துள்ளமையை நாம்இந்த இடத்தில் சுட்டிக்காட்டியாக வேண்டும்.

ஆகவே இந்த சந்தரப்பத்தில் நாம் விகிதாசார முறைமையின் கீழ் தேர்தலை நடத்துவதன் ஊடாக தற்போது மக்களுக்கு தற்போது தமது வாக்குரிமை தொடர்பில்ஏற்பட்டுள்ள அதீத அச்சம் மற்றும் சந்தேகத்தை போக்க முடியும்,

விகிதாசார முறைமையின் கீழ் உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைத் தேர்தல்களை நடத்தியதன் பின்னர் கலப்புத் தேர்தல் முறைமையிலுள்ள தவறுகளை களைந்து அதனை நாட்டிற்கு ஏற்ற விதத்தில் மாற்றி அதனை அறிமுகப்படுத்துவதற்கான போதிய கால அவகாசம் அராசங்கத்திற்கு இருக்கின்றது.

அது மாத்திரமன்றி தற்போது எமது நாடு சிக்கியுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் கலப்புத் தேர்தல் முறைமையின் ஊடாக தேர்தல் நடத்தப்பட்ட அதன்செலவீனங்கள் இரட்டிப்பாகும் என்பதில் எவ்வித விவாதமும் இல்லை.

ஏனெனில் கலப்புத் தேர்தல் முறைமையின் ஊடாக அதிக தொகுதிகள் மற்றும் அதிக உறுப்பினர்களும் தெரிவாவார்கள்,இதற்கான செலவீனங்களும் பழையமுறைமையை விட அதிகமே இருக்கும் என்பதை நாம் புரிந்து கொள்ள முடியும்.

அரசாங்கம் பழைய முறைமையில் தேர்தலை நடத்துவதற்காக பாராளுமன்றத்தில் புதிய சட்டவிதிகளை கொண்டு வந்து நிறைவேற்றுவதன் ஊடாக இலகுவாகஎமக்கு தேர்தல்களை நடத்தக் கூடிய வாய்ப்புக்கள் ஏற்படும்,

அதற்கு மூன்றில் இரண்டிலான பெரும்பான்மை தேவைப்படும் பட்சத்தில் அதனையும் இலகுவாகப் பெற்றுக் கொள்ள முடியும் என நம்புகின்றேன்.

ஏனெனில் தற்போது பெரும்பாலன அரசியற்கட்சிகளும் உறுப்பினர்களும் தேர்தல் பிற்போடப்படுவது தொடர்பில் விமர்சனங்களை முன்வைத்து வருவதால்அவர்களும் பெரும்பான்மையாக இந்த இடைக்கால சட்டத்திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களிப்பார்கள்,

எனவே தற்போது அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் குழுக்களினால் முன்வைக்கப்படும் விமர்சனங்களை மிக கவனமாக கருத்திற் கொண்டு இடைக்கால சட்டத்திருத்தமொன்றின்றைக் கொண்டு வந்து பழைய முறையினூடாக உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதற்கு அரசாங்கம் முன்வர வேண்டும்எனக் கேட்டுக் கொள்கின்றேன்.

இப்படிக்கு
உண்மையுள்ள
நசீர் அஹமட் (பொறியிலாளர்)
கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர்.
ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவர்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -