நேற்று (வியாழக்கிழமை) கல்வி அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு அவர் தெரிவித்தார். அங்கு உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது:
இலங்கையிலுள்ள 98 கல்வி வலயங்களில் கிண்ணியா கல்வி வலயம் கடந்த சில வருடங்களாக 98வது இடத்தில் இருந்து வருகின்றது. எனினும். இது தொடர்பாக பகுப்பாய்வு செய்யவோ இதற்கான காரணங்களைக் கண்டறிந்து பரிகாரம் காணவோ கிழக்கு மாகாணக் கல்வித் திணைக்களம் எந்த நடவடிக்கையும் முன்னெடுக்கவில்லை.
கிழக்கு மாகாணக் கல்வித் திணைக்களத்தின் சில செயற்பாடுகளுக்கு அர்த்தம் எதுவும் தெரிவதில்லை. அதிபர் தரமுள்ள அதிபர் ஒருவர் கடந்த சில வருடங்களாக எவ்வித பொறுப்புகளுமின்றி குறிஞ்சாக்கேணி கோட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளார். அவருக்கான கடமைப்பட்டியல் எதுவும் இல்லை.
அதேபோல விஞ்ஞான முதுமானி பட்டம் பெற்ற ஒருவர் கிண்ணியா கோட்டக் கல்வி அலுவலகத்தில் இணைக்கப்பட்டுள்ளார். விஞ்ஞான முதுமானிக்கும் கோட்டக் கல்வி அலுவலகத்திற்கும் என்ன தொடர்பு? இவருக்கு சரியான பொறுப்புக்களைக் கொடுத்து இவரைப் பயன்படுத்தியிருக்கலாம். இது பற்றியெல்லாம் சிந்திக்கும் நிலையில் மாகாணக் கல்வித் திணைக்களம் இல்லை.
இதேபோல கிண்ணியா வலயக் கல்வி அலுவலகத்தில் சில ஆசிரியர்கள் இணைக்கப் பட்டிருக்கின்றார்கள். அவர்களது பொறுப்புகள் என்னவென்றே அவர்களுக்கு தெரியாது. அலுவலகத்திற்கு போய் ஒப்பமிடுவது. சும்பளம் பெறுவது. இது தான் அவர்களது கடமை. இது குறித்து திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பிரஸ்தாபிக்கப்பட்டது. எனினும் நடவடிக்கை பூச்சியம்.
கடந்த 22 வருடங்களாக கிண்ணியாவில் ஒரு அதிபர் ஒரே பாடசாலையில் கடமை புரிந்து வருகின்றார். அவர் மாகாணக் கல்வி திணைக்கள அதிகாரிக்கு வேண்டப்பட்டவர் என்பதால் அவருக்கு இடமாற்றமில்லை.
சிரே~;ட ஆசிரியர் இருக்கும் போது கனி~;ட ஆசிரியருக்கு பொறுப்புகள் வழங்கப்படுகின்றன. இப்படி சட்டத்துக்கு புறம்பான செயற்பாடுகளினால் அதிகமான ஆசிரியர்கள் மனமுடைந்து போயுள்ளார்கள். அவர்களால் சரியாக இயங்க முடியாத உள்ளது.
கிண்ணியா வலயக் கல்வி அலுவலகத்தின் மீது கிழக்கு மாகாணக் கல்விப் பகுதியினர் மிகுந்த பாரபட்சம் காட்டுகின்றார்கள். ஒரு வலயக் கல்விப் பணிப்பாளர் 4 பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள் என சிரே~;ட அதிகாரிகள் 5 பேர் இருக்க வேண்டிய இந்த கல்வி வலயத்தில் ஒரேயொரு பெண் அதிகாரி மட்டுமே கடமையில் இருக்கின்றார்.
அதிகாரிகளை இடமாற்றும் போது சமநிலை பேணப்படுவது அவசியம். ஆனால் கிழக்கு மாகாணத்தில் இந்த நிலை இருப்பதாக தெரியவில்லை. நிலைமை இப்படி இருந்தால் எப்படி சிறந்த நிர்வாகத்தை செய்ய முடியும்? ஏப்படி சிறந்த பெறுபேறுகளைப் பெற முடியும்?
தற்போது கிண்ணியா கல்வி வலயத்திற்கு மிகவும் கனி~;ட உத்தியோகத்தர்கள் இருவர் நியமிக்கப்பட்டுள்ளார்கள். இவர்களால் எப்படி இந்த இடைவெளிகளை நிரப்ப முடியும்?
எனவே கிண்ணியாவின் கல்வி வீழ்ச்சிக்கான முழுப் பொறுப்பை கிழக்கு மாகாணக் கல்வித் திணைக்களமே ஏற்க வேண்டும்.
திருகோணமலை மாவட்டப் பாடசாலைகளைப் பொறுத்தவரை நீண்ட காலமாக தளபாடங்கள் வழங்கப் படாத நிலை உள்ளது. இதனால் பல பாடசாலைகளில் தளபாடப் பற்றாக்குறை காணப்படுகின்றது. உயர்தர மற்றும் சாதாரண தர பரீட்சை காலங்களில் பரீட்சை மண்டபங்களுக்காக சிரமங்களை எதிர்நோக்க வேண்டியுள்ளது. இதனால் வேறு பாடசாலைகளில் இருந்து தளபாடங்களைப் ஏற்றி வந்து மீள ஒப்படைக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே இந்த விடயத்தைக் கவனத்தில் கொள்ள வேண்டும் தளபாடம் வழங்கும் திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்த வேண்டும்.
கிண்ணியா கல்வி வலய முள்ளிப்பொத்தானைக் கோட்டப் பாடசாலைகளில் வகுப்பறைப் பற்றாக்குறை காணப்படுகின்றது. இங்குள்ள பாடசாலைகளில் நீண்ட காலமாக முறையான வகுப்பறை நிர்மாணங்கள் இடம்பெறவில்லை. இதனால் மர நிழல்களிலும் தாழ்வாரங்களிலும் வகுப்பறைகள் இயங்குகின்றன. இவை கவனத்தில் கொள்ளப்பட்டு தீர்வு காணப்பட வேண்டும்.
கிழக்கு மாகாணம் கடந்த சில ஆண்டுகளாக கல்வியில் பின்னடைந்து காணப்படுகின்றது. எனினும் இதனை நிவர்த்திக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரியவில்லை. ஓய்வு பெற்ற கல்விப் பணிப்பாளர் ஒருவர் கடந்த இரண்டரை ஆண்டுகள் கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சராக இருந்தார்.
அவர் கல்வி அமைச்சராக வந்ததையிட்டு பெரும் எதிர்பார்ப்போடு இருந்த மக்களை அவர் ஏமாற்றி விட்டார். கிழக்கு கல்வி வீழ்ச்சியை நிவர்த்திக்க அவரால் முயடிவில்லை. இந்த விடயங்களை வைத்துப் பார்க்கும் போது மாகாண சபை முறை கல்வி வீழ்ச்சிக்கு வழி வகுத்து விட்டதா என்ற சந்தேகம் எனக்கு வருவதுண்டு.
பல கல்வி அதிகாரிகள் கிழக்கு மாகாணக் கல்வித் திணைக்களத்தில் பணியாற்றிய போதும் கிழக்கு கல்வி வீழ்ச்சியை அவர்களால் நிவர்த்திக்க முடியவில்லை. சரியான பகுப்பாய்வுகளை மேற்கொண்டு பரிகாரம் காண முடியவில்லை. அந்த விடயத்தில் அவர்கள் தோற்றுப் போய் விட்டார்கள்.
கிழக்கு மாகாணக் கல்வித் திணைக்கள அதிகாரி ஒருவருக்கு அலுவலகத்தில் இரண்டு வழிகள் உள்ளன. ஓன்று நேரான பாதை. மற்றையது குறுக்குப் பாதை. பொதுமக்களுக்கு நேரான பாதை மட்டுமே தெரியும். அவர்கள் அப்பாதை ஊடாக அவரை சந்திக்க செல்லும் சமயங்களில் அவர் காணாமல் போய்விடுவார். குறுக்குப் பாதை ஊடாக வெளியேறி விடுவார். அவரைச் சந்திக்க சென்ற பொதுமக்கள் பின்னர் ஏமாற்றத்துடன் திரும்பி விடுவர். எனவே அதிகாரிகள் வெளிப்படையாக இயங்கும் தன்மைகள் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
தகவல் அறியும் சட்டம் நடைமுறைக்கு வந்தாலும் கிழக்கு மாகாணக் கல்வித் திணைக்களம் அதனை இன்னும் ஏற்றுக் கொள்ள வில்லை என பலர் புகார் தெரிவிக்கின்றார்கள். தகவல் கேட்டு அனுப்பும் படிவங்களுக்கு அங்கிருந்து எந்தப் பதிலும் வருவதில்லை என அவர்கள் கவலை தெரிவிக்கின்றார்கள். எனவே இது விடயத்தை விசேடமாக கவனத்திற்கெடுக்க வேண்டும்.
கிழக்கு மாகாணக் கல்வித் திணைக்களம் திறமையானவர்களுக்கு உரிய இடம் வழங்குவதில்லை. அதிபர் பரீட்சையில் சித்தியடைந்து தரம் பெற்ற பலர் பாடசாலைப் பொறுப்புகளின்றி இருக்கின்றார்கள். ஆனால் அதிபர் தரமில்லாத பலர் பதில் அதிபர்களாக நியமிக்கப் பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.
எனவே கல்வி அமைச்சர் அவர்கள் இலங்கையின் கல்வித்தரத்தை மேம்படுத்த வேண்டுமானால் கிழக்கு மாகாணக் கல்விப் பகுதியை முதலில் சீர்படுத்த வேண்டும். அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.
தற்போது கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளராக திரு. திசாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். இவர் நல்ல நிர்வாகி என்று பேசப்படுபவர் இவர் மூலமாகவாவது இந்த முன்னெடுப்பகளைச் செய்ய வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்.