தாம் ஏமாற்றப்பட்டதாக வாடிக்கையாளர்கள் வங்கி முகாமையாளர்களுக்கு வழங்கியுள்ள முறைப்பாடுகளையடுத்தே வங்கி நிர்வாகங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன.
வங்கிகளிலே பணம் பெறும் அட்டைகளை செயற்படுத்த தெரியாதவர்களிடமே இந்த ஏமாற்றுக் கும்பல் தமது கைவரிசையை காட்டுவதாகவும் பணத்தை பெற உதவி செய்வதுடன் வாடிக்கையாளரின் இரகசிய எண்ணை அறிந்து கொண்டு வாடிக்கையாளரின் அட்டைக்கு பதிலாக வேறொரு அட்டையை வழங்குவதாகவும் வாடிக்கையாளர் வங்கி வளவை விட்டுச் சென்றதும் அசல் அட்டையையும் இரகசிய எண்ணையும் பயன்படுத்தி அக்கணக்குகளிலுள்ள பணத்தை மோசடி செய்வதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
எனவே எந்தச் சந்தர்ப்பத்திலேனும் எவருக்கும் தமது பணம் பெறும் அட்டையையோ இரகசிய அட்டையையோ வழங்க வேண்டாமெனவும் இந்த மோசடிக்காரர்களிடம் பெரும் தொகை பணத்தை பறிகொடுத்த வாடிக்கையாளர்கள் தம்மி டம் முறைப்பாடு செய்துள்ளதாகவும் வங்கி முகாமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.