இலங்கையின் தேசிய நல்லிணக்க முயற்சிகளுக்கு தென்னாபிரிக்கா பூரண ஒத்துழைப்பு வழங்குமென தென்னாபிரிக்கா உயரிஸ்தானிகர் மாக்ஸ் அம்மையார் தெரிவித்தார்.
கிழக்கு மாகாண ஆளனருக்கிழடயிலான சந்திப்பு இன்று (12) நடைபெற்று முடிவடைந்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
மேலும் அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்
நல்லிணக்கம் தொடர்பான தனது சொந்த அனுபவங்களையும் அவற்றினூடாக பெறப்பட்ட முன்னேற்றகரமான பெறுபேறுகளையும் இலங்கையுடன் பகிர்ந்து கொண்டு நிலையான அமைதி ஏற்படுவதற்கு தன்னாலான உதவிகளை வழங்குவதென இதன் போது தெரிவித்தார்.
மேலும் கிழக்கு மாகாணத்தின் சமூக பொருளாதார முன்னேற்றத்திற்கும் கல்வி,மீன்பிடி மற்றும் சுற்றுலாத்துறை போன்ற துறைகளில் தென்னாபிரிக்காவின் பங்களிப்பினையும் முதலீட்டினையும் மேற்கொள்ள முடியுமெனவும் சகல வழங்களையும் உடைய கிழக்கு மாகாணம் இலங்கையின் உயர் பொருளாதார வளர்ச்சியுடைய மாகாணமாக திகளும் என்பதில் தனக்கு பூரண நம்பிக்கையுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
அத்துடன் புதிய அரசியலமைப்பு தொடர்பாக ஊடகவியலாளரின் கேள்விக்கு பதிலளித்த உயரிஸ்தானிகர் புதிய அரசியலமைப்பு பல முன்னேற்றகரமான அம்சங்களை கொண்டிருப்பதுடன் மக்களின் சமூக பொருளாதார உரிமைகளை உறுதிப்படுத்துவதாக அமையும் என எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டார்.
அத்துடன் நல்லிணக்க முயற்சிகள் வெற்றி பெறுவதற்கு சமூக பொருளாதார முன்னேற்றம் முக்கிய பங்காற்றும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.