கிராம உத்தியோகத்தர் நஜீபின் இடமாற்றத்தை இரத்துச் செய்யக் கோரி அக்கரைப்பற்றில் மக்கள் ஆர்ப்பாட்டம்




அபூ அல்தாபி-

க்கரைப்பற்று பிரதேச செயலகத்திற்கு முன்னால் மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றுள்ளது. பிரதேச செயலகத்தில் கிராம உத்தியோகத்தர் தட்டுப்பாடு நிலவும் இவ்வேளையில் சிரேஸ்ட கிராம உத்தியோகத்தர்களுக்கு இரு கிராம உத்தியோகத்தர் பிரிவு வழங்கப்பட்டு சேவை இpடம்பெற்றுக் கொண்டிருக்கும் இவ்வேளை எமது கிராம சேவையுத்தியோகத்தர் ஏ.ஏ.நஜீப் அவர்களின் அட்டாளைச்சேளைக்கான அநீதியான இடமாற்றத்தை உடன் இரத்துச் செய்யுமாறு கோசங்கள் எழுப்பப்பட்டன.

அக்கரைப்பற்று 4ம் குறிச்சி ,ஆலிம் நகர் ஆகிய இரு கிராம சேவகர் பிரிவுக்கும் இவரே கிராம உத்தியோகத்தராக கடமை புரிந்துள்ளார்.மக்கள் மனங்களை வென்ற இவர் இரவு பகல் பாராமல் 24 மணிநேர சேவையை புரிந்து வருகின்றார்.இப்படிப்பட்ட சிறந்த ஒருவரின் இடமாற்றத்தை ஏற்றுக்கொள்ள முடியாமல் மக்கள் கொந்தழித்ததைக் காண முடிந்தது.

சிவில் அமைப்புக்களான பள்ளிவாயல்கள் ,கிராம சங்கங்கள்,விவசாய அமைப்புக்கள் போன்றனவும் , பொதுமக்களும் இணைந்து இவரின் இடமாற்றத்தை உடன் இரத்துச் செய்யுமாறு கோரி தமது மகஜர்களை பிரதேச செயலாளரின் ஊடாக மாவட்டச்செயலாளருக்கு அனுப்புவதற்காக ஒப்படைக்க முயன்ற போது அங்கு பிரதேச செயலாளரோ,உதவிப்பிரதேச செயலாளரோ,நிருவாக உத்தியோகத்தரோ இருக்கவில்லை.சற்று இழுபறி நிலைமை காணப்பட்டது.மக்களின் நியாயமான அமைதிப்போராட்டத்தை மழுங்கடிக்கும் செயல்போல காணப்பட்டது..

பின்னர் பிரதேச செயலக உத்தியோகத்தர் எஸ்..ஜே.தேவானந்தன் முகாமைத்துவ உதவியாளர் (நிதிக்கிளை).......மகஜரைபப் பொறுப்பேற்றார்..மக்கள் பிரதிநிதிகளான யு.க.முர்சலின் ஷஹாஜியார், திரு.நௌசாத், எம்.ஏ.ஏ.ஜுனைடீன், எம்.ஏ.அவ்வாகுட்டி, எம்.எச்.நௌசாத், போன்றோர் கையளித்தனர்.

இக்கிராம சேவகரின் முறையற்ற இடமாற்ற விவகாரம் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் ,வஜிர அபேவர்தன,அமைச்சர் றிசாத் பதியுதீன் ,அமைச்சர் ஹிஸ்புல்லா,அமீர் அலி,முந்நாள் அமைச்சர் அதாவுல்லா போன்Nறூரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

குறிப்பு -இந்த ஆர்ப்பாட்டம் கடந்த புதன் கிழமை நடாத்தப்பட இருந்தவேளை ஒரு சிரேஸ்ட்ட கிராம உத்தியோகத்தர் அம்மக்களை வீடுவீடாக சென்று அச்சுறுத்தியதன் காரணமாக அந்ந ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது.

மைத்திரி யுகத்தில் நல்லாட்சியில் கெளரவமான முறையில் சாத்வீகப்போராட்டம் நடத்துவதனை தடுக்கும் உரிமையை யாரும் கையில் எடுக்க முடியாது.அவ்வாறு யாரும் தடுத்தால் அதனை சட்டரீதியாக அணுகவும் வாய்ப்புள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -