சிறுநீரக நோயாளி நான்காம் மாடியில் இருந்து குதித்து தற்கொலை -ராகம வைத்தியசாலையில் சம்பவம்

ரஹ்மான் அப்துல் அஸீஸ்-

சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளி ஒருவர், நான்காம் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் ராகமை போதனா வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது.

பமுனுவ, போபிட்டிய பகுதியைச் சேர்ந்த அதிகாரி ஆரச்சிகே சோமதாச (65) என்பவர், சிறுநீரகக் கோளாறு காரணமாக ராகமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

நோயின் தாக்கத்தைத் தாங்க முடியாமலோ அல்லது அடுத்து என்ன செய்வது என்று புரியாத கலக்கத்தினாலோ குறித்த நபர் கடந்த மூன்று நாட்களுக்குள் ஓரிரு முறை தற்கொலை செய்துகொள்ள முயற்சித்துள்ளார்.

இந்நிலையில், நேற்று (11) அவர் அனுமதிக்கப்பட்டிருந்த நான்காம் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார்.

இது குறித்த விசாரணைகளை ராகமை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -