மு.இராமச்சந்திரன் -
மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சின் நிதியொதுக்கீட்டினால் ஹட்டன் ஸ்ரீ மாணிக்கப் பிள்ளை ஆலயத்தின் இராஜகோபுர பணிகளுக்கு உதவும் வகையில் 25 லட்ச ரூபாவுக்கான காசோலை, கட்டிட நிர்மான பொருட்கள் என்பன ஆலயத்தின் செயலாளர் எம். இராஜேந்திரன், பொருளாளர் என். சுந்தரேசன், உப தலைவர் சேமசுந்தரம் ஆகியோரிடம் நேற்று (25-11-2017) கையளிக்கப்பட்டது.
இந் நிகழ்வில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் அமைச்சருமான பழனி திகாம்பரம், மத்திய மாகாண சபை உறுப்பினர் எஸ். ஸ்ரீதரன், எம். ராம், ஹட்டன் டிக்கோயா நகர சபையின் முன்னால் நகர பிதா நந்த குமார் உட்பட பல முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.