வேலூர் மாவட்டம் அரக்கோணம் அருகே, பனப்பாக்கம் கிணற்றில் குதித்து இறந்த சம்பவத்தை தொடர்ந்து, அவர்கள் பயின்று வந்த பள்ளியின் தலைமை ஆசிரியை ராமாமணி மற்றும் ஆசிரியை மீனாட்சி ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி தெரிவித்துள்ளார்.
11ம் வகுப்பு பயின்று வந்த நான்கு மாணவிகள் -தீபா, மனிஷா, சங்கரி மற்றும் ரேவதி ஆகியோர் கடந்த வெள்ளியன்று பள்ளிக்கு அருகில் இருந்த 80 அடி ஆழக்கிணற்றில் விழுந்ததாகவும், அவர்களின் உடலை கிணற்றில் இருந்த மீட்டு பிரதே பரிசோதனைக்கு அனுப்பியுள்ளதாகவும் வேலூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வேலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பகலவனிடம் கேட்டபோது மாணவிகளின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக பெற்றோர்கள் கூறியதையடுத்து சந்தேக மரணம் என்ற அடிப்படையில் வழக்கு பதிவாகியுள்ளது என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -