மு.இராமச்சந்திரன்-
மலையக பெருந்தோட்ட பகுதிகளுக்கு விற்பனை செய்ய வைத்திருந்த பெருந்தொகை மாவா போதை பொருள் நிலையமொன்று கொட்டகலையில் சுற்றி வளைக்கப்பட்டுள்ளது.
தலவாக்கலை அதிரடிபடையினரும் அட்டன் கலால் திணைக்கள அதிகாரிகளும் இணைந்து 18.11.2017 மேற்கொண்ட சுற்றிவளைப்பில் 100 கிலோ மாவா போதை பொருள் மீட்கப்பட்டுள்ளது.
கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட சுறிவளைப்பின் போது மாவா போதை பொருள் உட்பட இனிப்பு பானங்கள் புகையிலை போன்ற பொருட்களையும் கைப்பற்றியுள்ளதுடன் சந்தேகத்தின் பேரில் ஒருவரையும் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவரை பொலிஸ் பினையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதுடன் வழக்கு பதிவு செய்து அட்டன் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக அட்டன் கலால் திணைக்கள அதிகாரி தெரிவித்தனர்.





