கிழக்கு மாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரனையின் கீழ் எதிர்கால பண்பாட்டு சமூகம் எனும் தொனிப்பொருளில் பாடசாலை மாணவர்களுக்கிடையில் நடாத்தப்பட்ட குர்ஆன் திலாவத், அத்தாருஸ் ஸலாத் (தொழுகையின் பிராத்தனைகள்),அல்ஹதீஸ் ஆகிய போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வு பிரதேச செயலாளர் ஜனாப் I.M ஹனீபா தலைமையில் 17.11.2017 அன்று சாய்ந்தமருது பிரதேச செயலக கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது
மேட்படி நிகழ்வில் உதவிப் பிரதேச செயலாளர் I.M றிகாஸ், கலாசார உத்தியோகத்தர் M.I அம்ஜாத் திவிநெகும தலைமைபீட முகாமையாளர் A.C.A நஜீம, அபிவிருத்தி ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர் M.I இஷ்ஹாக், , விஞ்ஞான தொழிநுட்ப உத்தியோகத்தர் M.M சாக்கீர், கிராம நிருவாக உத்தியோகத்தர் M.S.M நளீர், உற்பத்தித்திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர் M.M.M அர்ஷத், அபிவிருத்தி உத்தியோகத்தர் A.H ஜிப்ரி மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், எனப் பலரும் கலந்து கொண்ட மேற்படி நிகழ்வில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கு அதீதிகளினால் பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கிவைக்கப்பட்டதோடு பங்குபற்றியவர்களுக்கு சான்றிகழ்களும் வழங்கிவைக்கப்பட்டமை விசேட அம்சமாகும்.