ஊடக துறையில் சகலுருக்கும் விளிப்புணர்வையும், அறிவினையும் பெற்றுக்கொடுக்கும் பொருட்டு இம்போர்ட் மிரர் ஊடக வலையமைப்பின் 7வது அகமையினை முன்னிட்டு ஊடகவியலாளர்களுக்கான முழு நாள் கருத்தரங்கு நேற்று (05.10.2017) வியாழக்கிழமை ஓட்டமாவடி பிரதேச சபை கேட்போர் கூடத்தில் வெற்றிகரமாக இடம் பெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட இம்போர் மிரர் நிருவாகத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்ட குறித்த முழு நாள் கருத்தரங்கில் நூற்றுக்கும் அதிகமான ஆண், பெண் ஊடக வியலாளர்களுடன் ஊடகத்துறையில் ஆர்வமுள்ள பல இளைஞர்களும் கலந்து கொண்டதனை அவதானிக்க கூடியதாக இருந்தது.
மேலும் குறித்த கருத்தரங்கில் எவ்வாறு சமூக வலைத்தளங்களை பயன்படுத்துதல்.? எவ்வாறு செய்திகளை எழுதுதல்.? வாசித்தல்.? விளம்பரப்படுத்துதல்.? போன்றவற்றுக்கான விளக்கங்களை அறிவிப்பு துறையில் சிறந்த அனுபவசாலிகளை கொண்டு விரிவுரை வழங்கப்பட்டது.
அத்தோடு செயலமர்வில் கலந்து கொண்ட அனைத்து ஊடகவியலாளர்களுக்கும் இம்போர்ட் மிரர் வலையமைபினால் பெறுமதிக்க சான்றுதல்கள் வழங்கப்பட்டதோடு, குறித்த நிகழ்விற்கு சமுக ஆர்வலரும், முன்னாள் கல்குடா தொகுதி முஸ்லிம் காங்கிரசின் இளைஞர் காங்கிரஸ் அமைப்பாளருமான சாட்டோ வை.எல்.மன்சூர் அனுசரணை வழங்கியிருந்தமையும் முக்கிய விடயமாகும். நிகழ்வின் சுருக்கமான காணொளி எமது இணைய நாளிதழ் வாசகர்களுக்காக இங்கே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.



