இந்து சமய கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சுவாமி விபுலாந்தரது பிறப்பின் 125வது ஆண்டு நிறைவையொட்டிய சுவாமி விபுலாந்தர் மாநாடும் கலைவிழாவும் நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொள்வதற்கே தமது கட்சித் தலைவர் வருகை தரவுள்ளதாக மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்தார்.
சனிக்கிழமை 07.10.2017 காலை இந்த நிகழ்வு மட்டக்களப்பு கல்லடியிலுள்ள சுவாமி விபுலாந்தா அழகியற் கற்கைகள் நிறுவகத்தில் இடம்பெறவிருப்பதாக அந்நிறுவகத்தின் பணிப்பாளர் கலாநிதி சி. ஜெய்சங்கர் தெரிவித்தார்.
இந்நிகழ்வுக்கு அழைக்கப்பட்டுள்ள அரசியல்வாதிகள், அறிவியலாளர்கள், அருளாளர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.
அந்தப் பட்டியலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், நாடாளுமன்ற எதிர்க் கட்சித் தலைவருமான இராஜவரோதயம் சம்பந்தன் அரசியலாளர் அதிஉயர் அதிதியாக அழைக்கப்பட்டுள்ளார்.
