மாகாணத்தில் முதலிடம் பெற்று சாய்ந்தமருது அல் ஹிலால் சாதனை!!!













2017 ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரிட்சை முடிவுகள் வெளிவந்துள்ள நிலையில் கிழக்குமாகாண மட்டத்திலும் அம்பாறை மாவட்ட மட்டத்திலும் முதலிடம் பெற்றறு பாடசாலைக்கும் மாகாணத்துக்கும் மாவட்டத்துக்கும் பெருமை தேடிக்கொடுத்த மாணவியையும் சாய்ந்தமருது அல் ஹிலால் வித்தியாலயத்தில் புலமைப்பரிசில் பரிட்சையில் சித்தியடைந்த மாணவ மாணவிகளையும் வரவேற்று கௌரவிக்கும் நிகழ்வு 2017-10-06 ஆம் திகதி பாடசாலை முற்றலில் அதிபர் எம்.எஸ்.எம்.Bபைசல் தலைமையில் இடம்பெற்றது.

நிகழ்வின்போது 191 புள்ளிகளைப் பெற்று பிராந்தியத்துக்கு பெருமை சேர்த்துக்கொடுத்த எம்.ஜே.அமாறா சஹ்லா என்ற மாணவி பரிசில்கள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டதுடன் ஏனைய மாணவ மாணவிகளான 180புள்ளிகளைப்பெற்ற எம்.ஜே. முகம்மட் மகர்ஜம் 172 புள்ளிகளைப் பெற்ற எம்.ஏ.அஸ்மத் சர்பா, 172 புள்ளிகளைப் பெற்ற முகம்மட் நுஹாத் 171 புள்ளிகளைப் பெற்ற முகம்மட் சிfப்பாப்f, 171 புள்ளிகளைப் பெற்ற எம்.எஸ்.சுர்ஜப் முகம்மட் பிகுரிஜ், ஆகியோரும் 171 புள்ளிகளைப் பெற்ற எம்.டப்ளியு. வடித் ஹஸீப், 169 புள்ளிகளைப் பெற்ற எம்.நஹ்திசியா சைனப், 166 புள்ளிகளைப் பெற்ற ஐ.முகம்மட் ஸம்லி சாஹி, 165 புள்ளிகளைப் பெற்ற எச். முகம்மட் அப்துல்லாஹ், 164 புள்ளிகளைப் பெற்ற எம்.ரி. முகம்மட் சுரைக் கனி, 164 புள்ளிகளைப் பெற்ற எம்.கே.அமரா சஹா, 162 புள்ளிகளைப் பெற்ற எம்.ஜே.ஜீனத்துள் ஹஸ்பானா, 162 புள்ளிகளைப் பெற்ற ரி. பாத்திமா சுfப்றா, 159 புள்ளிகளைப் பெற்ற மிஸ்பாஹுல் ஹுதா சைனப், 158 புள்ளிகளைப் பெற்ற எம்.கே.அன்சீப் அஹ்மத்,157 புள்ளிகளைப் பெற்ற ரி. முகம்மட் ஆஸீப், 157 புள்ளிகளைப் பெற்ற ஜே.பாத்திமா இஸ்ரா, 156 புள்ளிகளைப் பெற்ற ஏ. அஷ்ரிப் சமாஹி, 155 புள்ளிகளைப் பெற்ற எம்.என்.பாத்திமா சைரீன் ஷீபா மற்றும் 154 புள்ளிகளைப் பெற்ற எம்.ஏ. முகம்மட் சினஹ்ப் போன்றோரும் பரிசில்கள் கொடுத்து கௌரவிக்கப்பட்டனர்.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கல்முனைப்பிராந்திய கல்விப்பணிப்பாளர் எம்.எஸ்.ஏ.ஜலீல் கலந்துகொண்டதுடன் கௌரவ அதிதியாக பிரதிக்கல்விப்பணிப்பாளர் ஏ.எல்.எம்.முக்தார் கலந்துகொண்டதுடன் விஷேட அதிதிகளாக சாய்ந்தமருது மாளிகைக்காடு பெரிய ஜும்ஆ பெரிய பள்ளிவாசலின் தலைவர் வை.எம்.ஹனிபாவும் மகப்பேற்று வைத்திய நிபுணர் றஸீன் முகம்மட், முன்னாள் அதிபர் ஐ.எல்.ஏ.மஜீத் மற்று விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸின் பிரத்தியோக செயலாளர் நௌபர் ஏ.பாவா உள்ளிட்ட வர்களும் பிரதி அதிபர்கள் ஆசிரியர்கள் பெற்றோர்கள் நலன்விரும்பிகள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

அல் ஹிலால் வித்தியாலயத்தில் புலமைப்பரிசில் பரிட்சையில் இம்முறை 22 மாணவர்கள் புலமைப்பரிசில் பெற தகுதி பெற்றிருந்தபோதும் அதிகமான மாணவர்கள் 70 க்கு மேற்பட்ட புள்ளிகளை பெற்றிருந்தனர்.

வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்காக பள்ளிவாசல், யஹ்யாகான் பௌண்டேசன் உள்ளிட்ட நிறுவனங்களும் தனிப்பட்ட நலன்விரும்பிகளும் வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -