சிறந்த கல்விச்சமுகத்தை உருவாக்குகின்ற புனிதமான பணியை ஆசிரியர்களே மேற்கொள்கின்றனர் அவர்களது சிறந்த பணிக்கு ஈடாக எந்த பணியும் கிடையாது என்று கிராமிய பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்துள்ளார்.
சர்வதேச ஆசிரியர் தினத்தையிட்டு வெளியிட்டுள்ள செய்தியிலயே அவர் மேற்சொன்னவாறு தெரிவித்துள்ளார் அவர் அச் செய்தியில் தொடர்ந்து தெரிவித்துள்ளதாவது.
ஆசிரியர்களின் சிறந்த பணிக்கு ஈடாக எவரும் உரிமை கோரிவிட முடியாது. தந்தை, தாய் உறவினர்கள் எல்லோருக்கும் அப்பால்சென்று நல்லதொரு கல்வி சமுகத்தை கட்டி எழுப்புவதற்காகவும் அவர்களை சிறந்த கல்வியலாளர்களாகவும் மாற்றுவதற்கு எந்தவித எதிர்பார்ப்புமின்றி உழகை;கும் ஒரு சமுகம் உள்ளது என்றால் அது ஆசிரியர்சமுகம் என்பதற்கு எவரிடமும் மாற்றுக்கருத்திற்கு இடமிருக்காது என்று நினைக்கிறேன்.
அத்தகைய ஆசிரியர் குலாத்தை நினைத்து அவர்களை வருடத்தில் ஒருமுறை வாழ்த்தி அவர்களின் நல்லாசிகளைப் பெறுவதற்கு ஆசிரியர்தினத்தை சிறந்த நாளாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
சிறந்த ஆசிரியரின் பண்புகள் மாணவர்களை ஈர்ப்பது மட்டுமன்றி, அவர்களது மனதில் அப்படியே பதிகிறது. ஆசிரியரே மாணவனுக்கு முன்மாதிரியாக இருக்கிறார். தன்னலமற்ற, தியாக மனப்பான்மை கொண்ட ஆசிரியரால் தான் சிறந்த மாணவ சமுதாயத்தை உருவாக்க முடியும்.
ஆசிரியர் என்பது பணி அல்ல, அதனை ஒரு தொண்டாக நினைத்தே ஆசிரியர்கள் மாணவர்களின் அறியாமை எனும் இருளை நீக்கி அவர்களது வாழ்வில் ஒளி ஏற்றுகின்றனர் ஆசிரியர்கள். 'எழுத்தறிவித்தவன் இறைவன்' ஆவான் என்ற பொன்மொழிக்கேற்ப ஆசிரியர் சமுகத்தை வாழ்த்துவதில் மிகவும் சந்தோசமடைகிறேன் என்று தனது வாழ்த்து செய்தியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
