சாய்ந்தமருது பன்னூலாசிரியர் ஹாதிபுல்ஹுதா எம்.எம்.எம்.நூறுல்ஹக் எழுதிய 'யார் துரோகிகள் சாய்ந்தமருது உள்ளூராட்சி சபை' நூல் வெளியீட்டு விழா இன்று (18.10.2017) இரவு 07.00 மணிக்கு சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலை முன்பாக அமைந்துள்ள பேர்ல்ஸ் வரவேற்பு மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
சாய்ந்தமருது ஜும்மாஆப் பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை உறுப்பினர் வைத்தியக் கலாநிதி. என்.ஆரிப் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வில், கொழும்பு பல்கலைக்கழகம் முன்னாள் விரிவுரையாளர் எம்.ஐ.முகம்மட் சதாத் பிரதம உரையாற்றவுள்ளதுடன் சாய்ந்தமருது மறுமலர்ச்சி மன்றத்தின் செயலாளர் எஸ்.எம்.கலீல் மற்றும் சாய்ந்தமருது வர்த்தக சமூகத் தலைவர் ஏ.ஆர்.முகம்மட் அஸீம் ஆகியோர் கருத்துரையாற்றவுள்ளனர்.
இவ்விழாவில் சிறப்புப் பிரதிகள் வழங்கி வைப்பதன் ஊடாக நூல் வெளியீட்டு வைபவம் நடைபெறும். சாய்ந்தமருது மருதம் கலை இலக்கிய வட்டம் இந்நூல் வெளியீடு மற்றும் விழா ஏற்பாடுகளைச் செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.