கேகாலை நீதிமன்றத்தால் நான்கு பேருக்கு மரண தண்டனை


கேகாலை நீதி­மன்­றத்தில் இன்று 4 பேருக்கு மரண தண்­டனை தீர்ப்­ப­ளிக்­கப்­பட்­டுள்­ளது. 

கேகாலையில், 1995ஆம் ஆண்டு இடம்பெற்ற ஒரு கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில், ஆறு பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

அவர்களுள் ஒருவர் விசாரணைக் காலத்தின்போதே மரணமானார். மற்றொருவர் பொலிஸாரின் பிடியில் இருந்து தப்பியோடிவிட்டார்.

மீதமிருந்த 4 பேர் மீதும் பதியப்பட்டிருந்த வழக்கு விசாரணையில், குறிப்பிட்ட நான்கு பேரும் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டனர்.

இதையடுத்து, வழக்கை விசாரித்து வந்த கேகாலை நீதிமன்றம் நான்கு பேருக்கும் மரண தண்டனை வழங்கித் தீர்ப்பளித்துள்ளது.

மேலும், தப்பியோடியவரைக் கைது செய்து நீதிமன்றில் நிறுத்துமாறும் பொலிஸாருக்கு நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.(வீ)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -