எம்.வை.அமீர்-
வூஸ்க் எனப்படும் உலக கனேடிய பல்கலைக்கழகம் இலங்கையில் மிக நீண்டகாலமாக மக்கள் நலன் சார்ந்த பல்வேறு திட்டங்களை செயற்படுத்தி வந்துள்ளது. அந்த அடிப்படையில் வேலையாட்களை பயிற்றுவித்து நிறுவனங்களுக்கு வழங்கும் திட்டத்தின்கீழ் ஒரு தொகுதி இளைஞர் யுவதிகளுக்கு தகவல் தொழில்நுட்பம் சார்ந்த பயிற்சிகளை, சிம்ஸ் எனப்படும் தகவல் தொழில்நுட்ப விஞ்ஞான கற்கை நெறிகளுக்கான உயர் கல்வி நிறுவனத்தினூடாக பயிற்சிகளை வழங்கி, குறித்த பயிற்சியில் தேர்ச்சியுற்ற இளைஞர் யுவதிகளுக்கு சான்றிதழ் வழங்கி வைக்கும் நிகழ்வும் அடுத்தகட்ட பயிற்சி நெறிகளுக்கு மாணவர்களை இணைத்துக்கொள்ளும் நிகழ்வும்2017-09-22 ஆம் திகதி சாய்ந்தமருது பேர்ள் வரவேற்பு மண்டபத்தில் இடம்பெற்றது.
சிம்ஸ் உயர் கல்வி நிறுவனத்தின் தலைவர் அன்வர் ஏ முஸ்தபா தலைமையில் இடம்பெற்ற மேற்படி சான்றிதழ் வழங்கிவைக்கும் குறித்த நிகழ்வுக்கு உலக கனேடிய பல்கலைக்கழகத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் எஸ்த்தர் மெசின்தோஸ் பிரதம அதிதியாக கலந்துகொண்டு சான்றிதழ்களை வழங்கி வைத்தார்.
நிகழ்வுக்கு கௌரவ அதிதியாக உலக கனேடிய பல்கலைக்கழகத்தின் கிழக்குப் பிராந்திய திட்டமிடல் முகாமையாளர் மயில்வாகனம் யோகேஸ்வரனும் விஷேட அதிதிகளாக உலக கனேடிய பல்கலைக்கழகத்தின் அம்பாறை மாவட்டத்துக்குப் பொறுப்பான நிகழ்ச்சித் திட்டமிடல் சிரேஷ்ட உத்தியோகத்தர் ஜெசுசகாயம் மற்றும் திருகோணமலை மாவட்டத்துக்குப் பொறுப்பான நிகழ்ச்சித் திட்டமிடல் சிரேஷ்ட உத்தியோகத்தர் சரவணபவன் ஆகியோரும் வூஸ்க் மற்றும் சிம்ஸ் நிறுவனங்களின் உயர்மட்ட உறுப்பினர்களும் காலந்துகொண்டதுடன் பயிற்சியை முடித்துக்கொண்ட மற்றும் புதிதாக இணைந்துகொள்ளும் மாணவர்களும் அவர்களது பெற்றோரும் கலந்துகொண்டனர்.