திண்மக்கழிவு அகற்றல் சம்மந்தமாக கல்முனை மாநகரசபை ஆணையாரரிடம் மகஜர்...

திண்மக்கழிவு அகற்றல் சம்மந்தமாக அம்பாறை மாவட்ட இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் Z.M ஸாஜித் மற்றும் இளைஞர் அமைப்புகள் கல்முனை மாநகரசபை ஆணையாரரிடம் மகஜர்...

அண்மைக்காலமாக எமது கல்முனை மாநகரத்திற்கு உட்பட்ட பிரதேசத்தில் பாரிய பிரச்சினையாக காணப்படுகின்ற திண்மக்கழிவுகளை அகற்றல் தொடர்பாக இன்று புதன்கிழமை 20.09.2017 அம்பாறை மாவட்ட இளைஞர் பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை இளைஞர் கூட்டமைப்பு (Youth Alliance Sri Lanka) அமைப்பின் தலைவருமான Z.M ஸாஜித் மற்றும் Youth Unity Power (YUP) அமைப்பின் தலைவர் M.M.M றிப்னாஸ் பிரதி அமைப்பாளர் இபாக் அஹமட் ஆகியோர் கல்முனை மாநகர ஆணையாளர் கெளர.லியாகத் அலி அவர்களை நேரடியாக சந்தித்து கல்முனை மாநகரத்திற்கு உட்பட்ட பிரதேசத்தில் திண்மக்கழிவுகள் அகற்றுதல் தொடர்பான பல்வேறு விடயங்கள் கலந்தலோசிக்கப்பட்டு குறித்த அமைப்பினால்
அமைப்பினால் திண்மக்கழிவு முகாமைத்துவம் தொடர்பான செயற்றிட்டமோன்று ஆணையாளரிடம் வழங்கி வைக்கப்பட்டது.

இச் செயற்றிட்டத்தினூகடாகவும் கல்முனை மாநகர சபையின் எதிர்கால செயற்றிட்டங்கள் ஊடாகவும் இந்த பாரிய பிரச்சினையான திண்மக்கழிவுகளை அகற்றல் சம்பந்தமாக விரைவாக செயற்பாடுகளை மேற்கொள்வதாக இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் குறித்த அமைப்புகளுக்கு கல்முனை மாநகர ஆணையாளர் கெளர.லியாகத் அலி அவர்கள் வாக்களித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -