கவிஞர் ராஜகவி ராகிலின் ஓவியனை வாசித்த புல்லாங்குழலில் வர்ண இசை கவிதை நூல் வெளியீடு

பி.எம்.எம்.ஏ.காதர்-

நிந்தவூர் ஆர்.கே. மீயாவின் ஏற்பாட்டில் கவிஞர் ராஜகவி ராகிலின் ஓவியனை வாசித்த புல்லாங்குழலில் வர்ண இசை கவிதை நூல் வெளியீடு ஞாயிற்றுக்கிமை(17-09-2017)காலை 9.00 மணிக்கு நிந்தவூர் பிரதேச சபை மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

மணிப்புலவர் மருதூர் ஏ.மஜீட் தலைமையில் நடைபெறவுள்ள இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரீ.ஏ.நிஸாம் கலந்த கொள்கின்றார்.கௌரவ அதிதியாக தொழிலதிபர் அப்துல் கையூம்,அன்பு அதிதியாக போரசிரியை நூறுல் கரீமா சலீம் கலந்து கொள்கின்றார்.

தொடக்க உரை பிறை எப்.எம்.கட்டுப்பாட்டாளர் பஷீர் அப்துல் கையூம்,அறிமுக உரை கவிஞர் யூனுஸ் கே.றஹ்;மான், நூலுரை பேராசிரியர் றமீஸ் அப்துல்லா, வாழ்த்துரை கவிஞர் சோலைக்கிளி நட்புரை கவிஞர் ஏ.அஷ்ரப்,அன்புரைகள் முன்னாள் பீடாதிபதி ஏ.எல்.ஏ.றசூல், கவிஞர்களான ஏ.அஷ்ரப்,எஸ்.றபீக், எஸ்.எம்.எம்.ஜலாத், ஜெ.சியாஹூல் ஹக் ஆகியொர் நிகழ்வைத் தொகுத்து வழங்கவுள்ளனர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -