கல்முனை பற்றிமா புதிய அதிபருக்கு மகத்தான வரவேற்பு: வரவேற்புவிழாவில் மட்டு.ஆயர் ஜோசப் பொன்னையா பங்கேற்பு!




காரைதீவு நிருபர் சகா-

ல்முனையின் புகழ்பூத்த பிரபல பாடசாலையான கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய கல்லூரியின் புதிய அதிபராக நியமிக்கப்பட்ட வண.சகோ. குருஸ் சந்தியாகோவிற்கு நேற்று பாடசாலைச்சமுகத்தால் மகத்தான வரவேற்பளிக்கப்பட்டது.

இவ்வரவேற்பு விழாவில் மட்டு. மறைமாவட்ட ஆயர் அதி.வண. கலாநிதி ஜோசப் பொன்னையா ஆண்டகை கலந்துகொண்டு சிறப்பித்தார்.

சர்வ மத தலைவர்களும் கலந்துகொண்ட இவ்விழாவில் கல்முனை வலயக்கல்விப்பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல் கல்முனை தமிழ்ப்பிரிவு கோட்டக்கல்விப்பணிப்பாளர் திருமதி ஆர்.திரவியராஜா பாடசாலையின் பழையமாணவர் சங்கச்செயலாளர் எந்திரி. ஹென்றிஅமல்ராஜ் பாடசாலை அபிவிருத்திச்சபையின் செயலாளர் டாக்டர். என்.ரமேஸ் கிறிஸ்தவ டி லா சலே எனும் அமைப்பின் சகோதரர்கள் உள்ளிட்ட பலபிரமுகர்கள் கலந்து சிறப்பித்தனர்.

முன்னதாக அதிதிகள் பாண்ட் வாத்தியம் சகிதம் மாலைசூட்டப்பட்டு வரவேற்கப்பட்டனர்.

பின்னர் கல்லூரியின் கிளனி மண்டபத்திற்கு முன்னாலுள்ள திறந்த வெளியரங்கில் வரவேற்பு விழா மாணவர்களின் பிரசன்னத்தில் இடம்பெற்றது. 

கல்லூரியின் போசகரும் பிரதமஅதிதியுமான மட்டு. மறைமாவட்ட ஆயர் அதி.வண. கலாநிதி ஜோசப் பொன்னையா ஆசியுரை வழங்கினார்.

வரவேற்புவிழாவின்பின்னர் புதியஅதிபர் வண.சகோ. குருhஸ் சந்தியாகோ அதிதிகள் முக்கிய பிரமுகர்கள் முன்னிலையில் நேற்று சம்பிரதாயபூர்வமாக அலுவலகத்திற்குச்சென்று கடமைகளை மேற்கொண்டார்.

அச்சமயம் பாடசாலையின் பழையமாணவர் சங்கப்பிரதிநிதிகள் பாடசாலை அபிவிருத்திச்சபைப்பிரதிநிதிகள் மற்றும் மன்னாரின் பிரபல பாடசாலை அதிபர்கள் எனப்பலர் கலந்துகொண்டனர்.கல்லூரியின் பிரதிஅதிபர் கே.கருணாகரனும் உடனிருந்தார்.

இலங்கை அதிபர்சேவை தரம் 3இல் 2009இல் இணைந்துகொண்ட புதிய அதிபர் வண.சகோ. குருஸ் சந்தியாகோ மன்னார் சென்.அன்ஸ் வித்தியாலய அதிபராக கடந்த 8வருடகாலமாக கடமையாற்றியவர்.

இவர் கிறிஸ்தவ அமைப்புகளுள் டி லா சலே எனும் சகோதரர் அமைப்பைச்சேர்ந்தவர். இவ்வமைப்பு உலகத்தில் 60நாடுகளில் கல்விப்பணியை மாத்திரம் செய்துவருகின்ற கிறிஸ்தவ அமைப்பென்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -