காரைதீவு நிருபர் சகா-
கிழக்கு மாகாண விளையாட்டுப்போட்டி நேற்று முன்தினம் (6) புதன்கிழமை மாலை கந்தளாய் விளையாட்டரங்கில் ஆரம்பமானது.
கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹிதபோகல்லாகம பிரதம அதிதியாகக்கலந்துகொண்டு தேசியக்கொடிஏற்றிவைத்து விளையாட்டை அங்குரார்ப்பணம்செய்துவைத்தார்.
கல்வியமைச்சர் சி.தண்டாயுதபாணி காணியமைச்சர் ஆரியவத்தி கலப்பதி ஆகியோரும் மற்றும் மாகாண சபை உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.
திருகோணமலை மட்டக்களப்பு அம்பாறை ஆகிய 3மாவடடங்களையும் சேர்ந்த வீர வீராங்கனைகள் கலந்தகொண்டனர். பிரதேச செயலக விளையாட்டு உத்தியோகத்தர்கள் மத்தியஸ்தத்தில் ஈடுபட்டனர்.
கல்வியமைச்சின் விளையாட்டுத்துறைப்பணிப்பாளர் தலைமையில் நிகழ்வுகள் நடைபெற்றன.
இப்போட்டி தொடரும் என ஏற்பாட்டுக்குழுவினர் தெரிவித்தனர்.





