பிஸிலங்கா முதல் அலுவலகம் திறந்து வைப்பு...



ரச, தனியார் துறைகளுடன் இணைந்து புதிய தொழில்வாய்ப்புக்களை உருவாக்குவதையும், தொடக்கநிலை நிறுவனங்களை வலுப்படுத்துவதையும் கருவாக கொண்ட பிஸிலங்கா நிறுவனத்தின் முதலாவது தலைமை காரியாலயம் நேற்று 06.09.2017 புதன்கிழமை எம்.பி.ஏ.ஹாஜரா பீவி அவர்களால் திறந்து வைக்கப்பட்டதோடு, ஏ.கச்சிமுஹம்மது அவர்களால் கடமைகளும் ஆரம்பித்து வைக்கப்பட்டன.

2020 ஆம் ஆண்டு கிழக்கு மண்ணில் 100 உள்ளக வேலைவாய்ப்பு மற்றும் 1000 சுயதொழில் வாய்ப்பினை உருவாக்குவதை மையமாக கொண்ட BusyLanka Project - 2020 என்ற ஐந்தாண்டுகால திட்டத்தைச் செயற்படுத்தும் விதத்தில் பிஸிலங்கா அலுவலகத்தை கிழக்கிலேயே முதன் முதலில் தொடங்கியிருந்தாலும் எதிர்காலத்தில் தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் இதனது செயற்பாடுகள் இறையுதவியால் வளர்ச்சியடையும் என அதனது ஸ்தாபகரும், பிரதம நிறைவேற்று அதிகாரியுமான கே.எம்.மஸாஹிம் (மஸாகி) தெரிவித்தார்.

மேலும் கருத்துத் தெரிவிக்கையில், தன்னை இப்படியொரு தன்னம்பிக்கை உள்ளவனாக அடுத்தவர் கஸ்ட்டம் உணர்ந்து தன்னால் முடிந்த முயற்சியைச் செய்யக் கூடியவனாக வளர்த்தெடுப்பதில் அக்கறையுடன் செயற்பட்ட தனது தாயைக் கொண்டு இந்த நிறுவனத்தை தொடங்கி வைப்பதில் தான் பெருமிதம் அடைவதாகக் குறிப்பிட்டார்.

மேலும், சிறுவயது முதலே தான் தொழிலுக்குச் செல்லும் இடங்களுக்கெல்லாம் உதவிக்கு அழைத்துச் சென்று கடின உழைப்பைக் கற்றுத் தந்து தன்னையும் ஒரு தொழில்முனைவோராக மாற்றிய தனது முதல் ஆசான் தந்தையைக் கொண்டு, தன் கடமைகளை ஆரம்பித்து வைப்பதில் நெகிழ்ச்சி அடைவதாகவும் குறிப்பிட்டார்.

பத்தாயிரம் மைல்கள் கொண்ட பயணமும் முதல் அடியிலேயே ஆரம்பிப்பதால், எமது வெற்றி இலக்கு எத்தனை தொலைவாக இருந்தாலும் தூரநோக்கு மற்றும் சிறந்த திட்டமிடல் மூலம் அவைகளை அடைவதற்கான கடின முயற்சிகளை இறைவன் உதவியுடன் செய்வதற்கு தமது ”டீம்“ யினை தயார்படுத்தி வருவதாகவும், தனது மனைவி பர்ஹானா மற்றும் பிஸிலங்கா முகாமையாளர் நஜீப் அவர்களும் அதற்கு பக்கபலமாக இருப்பதாகவும் “அமைதியாக இருந்து, வேகமாக முன்னேறி – எம் கனவுகளை நிஜமாக்குவோம்” என்றும் நம்பிக்கையுடன் குறிப்பிட்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -