ஆரோக்கிய வாழ்வும் மாற்று மருத்துவ முறைகளும் ஒரு வார விழிப்புணர்வும்..!

மது ஆரோக்கியத்திற்கு நாமே கேடு விளைவித்துக் கொண்டிருக்கின்றோமா? என்ற தலைப்பில், கொம்பசன் இனிசியேசிடிவ் ( Compassion Initiative ) என்ற முன்னெடுப்பின கீழ் கடந்த ஒருவார காலம் 7ம் திகதி தொடக்கம் 12ம் திகதி வரை அதிரடி விழிப்புணர்வுக் கலந்துரையாடல்கள் தொடர்ச்சியாக கீழ் முஸ்லிம் எய்ட் சிறிலங்கா நிறுவனத்தினால் முன்னெடுக்கப்பட்டது. 

சிறு சிறு குழுக்களாக சமூகத்திலுள்ள பலதரப்பினருடன் இக் கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டது. கெககிராவ நேகம, கஹட்டகஸ்திகிலிய, மூதூர், கிண்ணியா, புதுக்குடியிருப்பு, ஓட்டமாவடி ஆகிய பிரதேசங்களில் மேற்படி கலந்துரையாடல்களை முஸ்லிம் எய்ட் உள்ளுர் பாட்னர் அமைப்புகளான சமாதானத்தை மேம்படுத்தும் மகளிர் அமைப்பு PPWO Hope of People, தடையம் கதிரவன் சமூக அபிவிருத்தி அமைப்பு, ஹியுமன் எய்ட் ஆகிய அமைப்புகள் கள ஏற்பாடுகளையும் பங்குபற்றுனர் ஒன்று திரட்டலையும் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

கடந்த முப்பது வருடகாலப்பகுதியில் இலங்கையில் நோய்களின் பெருக்கமும் நோயாளிகளின் எண்;ணிக்கையில் அதிகரிப்பும் மருந்து விற்பனை நிலையங்கள் பெருக்கம், வைத்தியசாலைகள், கிளினக்குகள் என்பவற்றின் பெருக்கம் என்பன கட்டுக் கடங்காது அதிகரித்து வருகின்றமை வெளிப்படை. பொருளாதாரம், விஞ்ஞானம் கலாசாரம் என்பவற்றில் முன்னேறி வருவதாகப் பெருமைப்பட்டுக் கொள்ளும் இன்றைய சமூகத்தில் இவ்வாறான நிலைமை காணப்படுவது ஒரு முரண்நகையாகத் தெரியவில்லையா?. உண்மையில் நோய்கள் தானாகப் பெருகுகின்றனவா? அல்லது திட்டமிட்டு நோய்கள் உருவாக்கப்பட்டு, பெருக்கப் படுகின்றனவா? என்ற சந்தேகத்தை இந்நிலை நமக்குள் தோற்றுவிக்கின்றது என கலந்து கொண்ட மக்கள் தமது சந்தேகத்தை வெளியிட்டனர். 

ஒரு காலத்தில் புனிதமாகப் போற்றப்பட்டு வந்த மருத்துவத்துறையானது இன்று ஒரு வியாபாரமாக, கொழுத்த இலாபம் சம்பாதிக்கும் ஒரு துறையாக மாறிவிட்டுள்ளது. மருத்துவமும் ஒரு வியாபாரமாக மாறிவிடுகின்றது என்றால், இதில் கொழுத்த இலாபம் சம்பாதிக்க வேண்டும்; என்றால், இதற்கு ஏராளமான நோயாளிகள் வாடிக்கையாளர்களாக வேண்டும். இந்த நோயாளிகள் எப்போதும் நோய்களைச் சுமந்தவர்களாக இருக்கும் அதேசமயம் இறந்து விடவும் கூடாது. 

இவர்கள் மருந்துகளினால் தொடர்ந்து உயிர்வாழும் நிலையில் வைக்கப்பட்டால், இடைவிடாது இலாபம் கிடைத்துக் கொண்டேயிருக்கும். அப்படியானால் மருந்துகளை உற்பத்தி செய்து குவிக்கின்ற மருந்துக் கொம்பனிகளுக்கும் மருந்துகளை எழுதித் தள்ளுகின்ற இன்றைய பெரும்பாலான வைத்தியர்களுக்கும் குறிப்பாக ஆங்கில வைத்தியர்களுக்கும் இடையில் மறைமுக ஒப்பந்தம் இருக்குமோ என்ற சந்தேகம் இன்று உலகின் பலபாகங்களில் தீவிரமாக எழுப்பப்பட்டு வருகின்றது.

தமக்கு ஏற்படுகின்ற நோய்கள் பற்றியும் அதற்காக எழுதித்தள்ளப்படுகின்ற மருந்துகளின் குணங்கள் அவற்றின் பக்கவிளைகளின் தாக்கங்கள் போன்றவற்றில் எந்தவித அறிவும் இன்றி இருளில் வைக்கப்பட்டிருக்கும் அப்பாவி நோயாளிகள் இன்று தமது பணத்தை மருந்துகளுக்காகத் தரைவார்ப்பது மாத்திரமன்றி, தமது உடலையும் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளட்டும், அறுத்தாலும் கீறினாலும் ஊசிகளைக் குத்தினாலும் பரவாயில்லை என்ற நிலையில் தம்மை வைத்தியர்களில் ஒப்படைத்து விட்டு வாளாவிருக்கின்ற பரிதாப நிலை எங்கும் காணப்படுகின்றது. 

தமக்கு ஏற்பட்டுள்ள நோய் என்ன, அதற்காகத் தரப்படும் மருந்துகளின பயன்பாடு என்ன என்று நோயாளிகள் வைத்தியர்களிடம் விசாரிப்பதற்கு அஞ்சுகின்ற நிலையும் இன்று கருப்படுகின்றதாக இக் கலந்துரையாடல்களில் முறைப்பாடுகள் செய்யப்பட்டன. நோயாளிகளுக்கு ஏற்படுகின்ற நோய்களைக் குணப்படுத்துவதற்குப் பதிலாக அவர்களுக்கு கொப்பிகளை வழங்கி, தொடர்ச்சியாக தம்மிடம் வரப்பண்ணி நோயாளிகளுக்குத் தொடர்ச்சியாக மருந்துகள் வழங்குவதும், மருந்துகள் இல்லாவிட்டால் நோயாளிகள்; உயிருடன் இருக்க முடியாது என்ற நிலை தோற்றப்பாடு உருவாக்கப்பட்டுள்ளதாக இங்கு சுட்டிக்காட்டப்பட்டது. 

ஆயுர்வேதம், யுனானி, சித்த, ஹோமியோபதி, அக்குபக்சர், நாட்டுவைத்தியம் போன்ற பல்வேறு வைத்தியமுறைகள் இலங்கையில் காணப்படுகின்ற போதிலும், இந்த ஒவ்வொரு வைத்தியத்துறைக்கும் தனித்தனியான சிறப்பும் ஆற்றலும் இருக்கின்ற போதிலும், அலோபதி எனப்படுகின்ற ஆங்கில iவைத்திய முறை அனைத்தையும் ஆதிக்கம் செலுத்துவதாகவும், பல்வேறு பக்கவிளைவுகளை அல்லது பாரதூரமான விளைவுகளையும் ஏற்படுத்தக் கூடிய இரசாயானமாகிய இந்த மருந்துகள் எராளமான அளவில் கொடுக்கப்படுவதாகவும் இக்கலந்துரையாடலடகளில் வெளிப்பட்டன. 

இறுதியாக, இதுபோன்ற விழிப்புணர்வு கலந்துரையாடல்கள் பரவலாக மக்கள் மத்தியில் மேற்கொள்ளப்படல் வேண்டும் என்று கோரப்பட்டதுடன், இக்கலந்துரையாடல்களில் பெற்ற கருத்துக்கள் மற்றும் விழிப்புணர்வுகளை தமது ஊரில் பரவலாக எடுத்துச் செல்வதற்கு தாமும் முயற்சிகளை மேற்கொள்வதாக பங்குபற்றிய மக்கள் உறுதியளித்தனர். 
படங்கள் அஸீம் கிலாப்தீன்-


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -