அதாவுல்லாவின் நகரசபைப் பிரிப்பையே கல்முனையில் அமுல்படுத்த வேண்டும்..!

சாய்ந்தமருதுக்கான நகரசபைக் கோரிக்கை அமைச்சர் பைசர் முஸ்தபாவினால் உள்வாங்கப்பட்டு நடைமுறைப்படுத்தப் படவுள்ளதாக அறிகின்றோம். மிக்க மகிழ்ச்சி. அந்தந்த பிரதேச மக்கள் தங்கள் வளப்பகிர்வினைக் கொண்டு தம்மை தாமே நிர்வகித்துக் கொள்வதே ஜனநாயகம். கடந்த காலங்களில் மருதமுனை, பாண்டிருப்பு, நற்பட்டிமுனை, கல்முனை, சாய்ந்தமருது போன்ற ஊர்களை பிரதினிதித்துவப்படுத்தி கல்முனை மாநகர சபையே ஆண்டு வந்தது.

பின்னர் குடித்தொகைப் பரம்பல், மக்களின் சுய முன்னேற்றம், வருமானம் என்பவற்றைக்கருத்தில் கொண்டும் சாய்ந்தமருது மக்களின் ஏகோபித்த வேண்டுகோளின் அடிப்படையிலும் , கல்முனை மாநகர சபையின் கீழ் வாழும் தமிழ் முஸ்லிம் உறவுகளுக்குப் பங்கம் வராத அடிப்படையிலும் முன்னாள் உள்ளூராட்சி மாகாணசபைகள் அமைச்சராகவிருந்த அதாவுல்லா அவர்களினால் நான்கு சபைகளாக பிரகடனப்படுத்திவதற்கான ஏற்பாடுகள் உள்வாங்கப்பட்டு ஏதோ ஒரு காரணத்தினால் கைகூடாமல் போய்விட்டது.

பின்னாட்களில் இதுவே முஸ்லிம் தலைவர்களின் அரசியலாக மாற்றமடைந்து தனித்தனியாக கூறு போட்டுப் பங்கிட்டுக்கொள்ளும் நிலையினை தோற்றுவித்துள்ளது. இந்த விடையத்தில் இந்தப்பிராந்திய மக்களின் வாழ்வியல் மற்றும் தமிழ் முஸ்லிம் உறவு என்பவற்றை சற்றேனும் சிந்தித்துப் பாராமல் அமைச்சர் பைசர் முஸ்தபா நிர்ப்பந்த்தத்தின் நடுவே நியாயவாதியாக நிற்க நினைப்பது எதிர்கால கல்முனை மாநகரை சூனியமாக்குகின்ற முயற்சியாகும். இதற்கு அவர் ஒரு போதும் துணைபோகக் கூடாது.

அவ்வாறுதான் நகரசபைக் கோரிக்கையை அமுல் படுத்தவேண்டிய நிர்ப்பந்தம் வருமானால் முன்னாள் அமைச்சர் அதாவுல்லாவினால் திறம்பட பிரித்துக் காட்டிய வழிமுறையில் அமைத்துக் கொடுப்பதே இங்குள்ள மக்கள் அனைவரையும் ஒற்றுமையின்பால் வாழ வைப்பதற்கான கைங்கரியமாகும். இதனை அமைச்சர் பைசர் முஸ்தபாவும் நல்லாட்சி அரசும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

சாய்ந்தமருதுக்கான நகரசபை கொடுக்கும் முயற்சியினை ஏனைய ஊரவரும் ஆதரிப்பதோடு , மருதமுனை நகரசபைக்கான வரைவினையும் தமிழ் மக்களை அடிப்படையாகக் கொண்டு பாண்டிருப்புக்கான நகரசபைவரைவினையும் அதே தினத்தில் வர்த்தமானியில் பிரசுரிக்க கோருவதே சிறப்பாகும். 
ஷிபான் BM,
மருதமுனை.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -