நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்-
திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டிரேட்டன் தோட்டத்தில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் 12.08.2017 முன்னெடுக்கப்பட்டது
நாடளாவிய ரீதியில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் அரசாங்கத்தினால் முன்னெடுத்து வருகின்ற நிலையில் திம்புள்ள பத்தனை பிரஜா பொலிஸ் குழுவினரால் மேற்பட்ட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது
பிரஜாபொலிஸ் குழு பொருப்பதிகாரி சமந்த தலைமையில் கழிவுகள் பிளாஸ்ரிக் பொருட்கள். பொலித்தீன்கள் என பொது இடங்களில் கிடந்தவை அகற்பட்டதுடன் நீர் நிலைகளும் துப்பரவு செய்யப்பட்டது