வீட்டுவேலை, தோட்டப்பராமரிப்பு, வீட்டுக்காவல், டிரைவர் போன்ற பணிகளில் பணியாளர்கள் நியமிக்கப்படலாம். இது தொடர்பாக வேலைக்கு வருவோருக்கும், வேலை தருவோருக்கும் இடையே ஒப்பந்தம் செய்யப்படவேண்டியது அவசியமாகும்.
வேலைக்காரர்களுக்கு தினமும் பத்து மணி நேரம் வேலை, வாரம் ஒருநாள் விடுமுறை கட்டாயம் அவர்களுக்கு தேவையான தங்குமிடம், ஆடை வசதிகள் செய்துதர வேண்டும்.
மாத இறுதியில் சம்பளப்பணத்தை பணமாகவோ, பணியாளர் வங்கிக்கணக்கிலோ செலுத்தவேண்டும். பணிமுடிந்து திரும்புகையில் ஆண்டுக்கு மூன்று வார சம்பளப்பணத்தை ஊக்கத்தொகையாக வழங்க வேண்டும்.
பணியாளரை உடல் ரீதியாகவோ, மனரீதியாகவோ சங்கடம் தரக்கூடாது. அவரது மருத்துவ தேவைகளையும் பூர்த்தி செய்யவேண்டும். பணியாளர் விதிமுறைகளை மீறுவோருக்கு பத்தாயிரம் கத்தார்ரியால் அபராதமாக விதிக்கப்படும். இதேபோன்று பணியாளர்களும் ஒப்பந்தத்தில் குறிப்பிட்டபடி நடந்துகொள்ளவேண்டும்.
வேலைக்கு வைத்துள்ளவர் ரகசியங்களை காக்கவேண்டும். அவர்கள் ஒப்புதலுடன் பிற பணிகளை செய்யலாம். கத்தார் நாட்டின் சட்டதிட்டங்களை மதித்து நடக்க வேண்டும் இவ்வாறு புதிய பணியாளர் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
#சட்டம்
#கத்தார்
#தோஹா
#புதிது