ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ்-
மறுமலர்ச்சி இயக்கமும், தேசிய சூறா சபையின் சகவாழ்வுப் பிரிவும் இணைந்து நடாத்தி வரும் 'தேசத்தைக் கட்டியெழுப்புதல்' எனும் விசேட கலந்துரையாடல் நிந்தவூர் நலன்புரிச் சபைக் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
முன்னாள் மாகாணக் கல்விப் பணிப்பாளரும், நிந்தவூர் நலன்புரிச் சபைத் தலைவருமான அல்ஹாஜ்.எம்.எச்.யாக்கூப் ஹசன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில்; ராவய பத்திரிகை முன்னாள் பிரதம ஆசிரியரும், அரசியல் ஆய்வாளருமான விக்டர் ஐவன் பிரதம பேச்சாளராகக் கலந்து கொண்டார்.
மேலும் இந்நிகழ்வில் மக்கள் விடுதலை முன்னணியின்; கண்டி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நவரெத்ன பண்டார, கம்பஹா மாவட்ட முன்னாள் பிரதிக் கல்விப் பணிப்பாளர் ரி.எம்.பிரேமவர்டன, மற்றும், தேசிய சூறா சபையின் சகவாழ்வுப் பிரிவின் உறுப்பினர்களான எம்.எஸ்.எம்.பௌசான், ஜலீல் மௌலவி, முனீர் மௌலவி உள்ளிட்டோருடன் நிந்தவூர் பிரதேச கல்விமான்கள், இளம் அரசியல் பிரமுகர்கள், சிரேஷ்ட ஊடகவியலாளர்கள் எனப்பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.