மீராவோடை மீரா ஜும்ஆப்பள்ளிவாயலின் புதிய நிருவாக சபைத்தெரிவுத்தேர்தல் -நேரடி ரிப்போர்ட்



எச்.எம்.எம்.பர்ஸான் -

கோறளைப்பற்று ஓட்டமாவடி மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட மீராவோடை மீரா ஜும்ஆப் பள்ளிவாயலின் புதிய நிருவாக சபைத் தெரிவுக்கான தேர்தல் தற்போது மிகவும் அமைதியாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

குறித்த நிருவாகத்தெரிவுக்கான தேர்தலில் 21 அங்கத்தவர்களைத் தெரிவு செய்வதற்காக 35 பேர் போட்டியிடுகின்றனர். இவ்வேட்பாளர்களில் கடந்த நிருவாகத்தில் அங்கம் வகித்த பலரும் புது முகங்களும் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது. அதே நேரம் நிருவாகத்தை கைபற்றிக் கொள்ளும் நோக்கில் ஆதரவு திரட்டும் பணிகளும் வேட்பாளர்களால் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிகிறது.

கண்காணிப்புப்பணிகளில் முஸ்லிம் கலாசார திணைக்களத்தின் அதிகாரிகளும் முக்கியஸ்தர்களும் ஈடுபட்டுள்ளனர்.

சுமார் காலை 8 மணிக்கு ஆரம்பமான வாக்குப்பதிவு மாலை 2 மணி இடம்பெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது. தமது அடையாளத்தை உறுதி செய்து வாக்களிப்பில் கலந்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்படுள்ளது.

தற்போது நிருவாகத்தெரிவுக்குப் போட்டியிடும் வேட்பாளர்களும் ஊர் ஜமாஅத்தார்களும் கலந்து கொண்டு வாக்களிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதே நேரம் வாக்களிக்கத்தகுதி பெற்ற அனைவரும் தவறாது கலந்து கொண்டு வாக்குகளை அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -