எமது டுபாய் வங்கிக்கணக்குகளில் பில்லியன் கணக்கில் பணம் இருந்தால் ஏன் இன்னும் அவற்றை பறிமுதல்செய்யவில்லை- நாமல் ராஜபக்ஸ


நேற்று மாலை இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றும் போது இது விடயமாக மேலும் கருத்து வெளிட்ட அவர்,

மன்னாரில் இடம்பெற்ற வைத்தியசாலை கட்டட திறப்பு விழாவில் உரையாற்றிய அமைச்சர் ராஜித சேனாரத்ன ரவிகருணாநாயக்க மீது முன் வைக்கப்படும் ஊழல் குற்றச் சாட்டுக்கள் கூட்டு எதிரணியினரின் ஊழல்களுடன் ஒப்பிடும்போது சிறு துளியென பேசியுள்ளார்.

ஒரு வங்கி கணக்கில் ஒரு பில்லியன் அமெரிக்க டொலரும் செயலாளர் ஒருவரின் வங்கி கணக்கில் 1800 மில்லியன்அமெரிக்க டொலரும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் வங்கி கணக்கில் 500 மில்லியன் அமெரிக்க டொலரும் இருப்பதாககூறியுள்ளார்.இப்படி துல்லியமாக கணக்கு தெரிந்து வைத்துள்ள அமைச்சர் ராஜித கணக்கை பொது மக்களிடம் வந்துகூறுவதை விடுத்து அவர்களை கைது செய்து அந்த பணத்தை பறிமுதல் செய்திருக்கலாமே.

மஹிந்த அணியினர் பதுக்கி வைத்துள்ள பணத்தை எடுத்து வந்தால் நாட்டை அபிவிருத்தி செய்யலாம் கடனை கட்டிவிடலாம் என்றவர்கள் இவ்வாட்சி அமைந்து இரண்டரை வருடங்கள் கழிந்து விட்ட போதும் முன்னாள் ஜனாதிபதிமஹிந்த அணியினரின் ஒரு சிறு ஊழலை கூட கண்டுபிடிக்க முடியவில்லை.ஆட்சிக்கும் வர முன்பும் வாயாலேயேதிருடன் பட்டம் சூட்டினார்கள். ஆட்சிக்கு வந்த பின்பும் வாயாலேயே திருடன் பட்டம் சூட்டுகிறார்கள். அப்படியானால்திருடனை பிடிக்க வந்த நல்லாட்சி என்ன செய்கிறது?

ஊழலை கண்டு பிடித்து கடனை அடைக்க முடியாது என்பதனால் இவ்வரசு நாட்டின் வளங்களை வெளிநாடுகளுக்குவிற்று கடனை அடைக்க முயற்சிக்கின்றார்களோ தெரியவில்லை , அல்லாது போனால் குறித்த பணத்தில் பங்குப்பேரத்துக்காக கைது செய்யமால் உள்ளார்களா?

கூட்டு எதிரணியை சேர்ந்த எவருக்கும் இத்தனை துல்லியமான ஊழல் குற்றச் சாட்டுக்களில்லை. இந்த அரசானதுஊழலை ஒழிக்க வந்த அரசாக இருந்தால் முதலில் அமைச்சர் ரவி கருனானாயக்கறவுக்கு எதிராக நடவடிக்கைஎடுக்கட்டும்.அவர் ஊழலில் அகப்பட நிதி அமைச்சை மாற்றி வெளி விவகார அமைச்சை வழங்கியதே நல்லாட்சியின்தண்டனையாகும்.

இனியும் இவர்களின் பொய்களை கண்டு ஏமாற மக்கள் தயாராக இல்லை என்பதை அமைச்சர் ராஜிதசேனாரத்தன நன்கு அறிந்துகொள்ள வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டு சொத்துக்களை விற்பனை செய்வதை நிறுத்திவிட்டு எமது டுபாய் வங்கிகளில் இருப்பதாக ராஜித கூறும்பணத்தை பறிமுதல் செய்து நாட்டை அவிருத்தி செய்யவும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -