முன்னாள் அமைச்சர் அல்ஹாஜ் ஏ.எச்.எம் அஸ்வர் அவர்களின் மரணச்செய்தி கேட்டு நாம் ஆழ்ந்த கவலை அடைவதாகவும், அஸ்வர் ஹாஜியார் அவர்கள் முஸ்லிம் சமய கலாசார இராஜாங்க அமைச்சராக இருந்த போது 1989, 1994 ம் ஆண்டு காலப்பகுதியில் முஸ்லிம் கலாசார அமைச்சை மற்றும் வக்ப் திணைக்களத்தை மிக பலமுள்ள ஒரு நிறுவனமாக மாற்றுவதில் அவர் ஆற்றிய பங்களிப்பு என்றுமே மறக்க முடியாது. அவரின் அரும் பெரும் சேவைகளையும் - பணிகளையும் நினைவு கூறுவதாகவும் இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.
இது தொடர்பாக இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,
முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம் அஸ்வர் ஹாஜியார் அவர்கள் தன்னுடைய நீண்ட கால அரசியல் வரலாற்றில் பல்வேறுபட்ட சாதனைகளை புரிந்த ஒருவர். அவர்கள் முஸ்லிம் சமய கலாசார இராஜாங்க அமைச்சராக இருந்த போது 1989, 1994 ம் ஆண்டு காலப்பகுதியிலே முஸ்லிம் கலாசார அமைச்சை மற்றும் வக்ப் திணைக்களத்தை மிக பலமுள்ள ஒரு நிறுவனமாக மாற்றுவதில் அவர் ஆற்றிய பங்களிப்பு என்றுமே மறக்க முடியாது.
இறுதி வரையும் தன்னுடைய அரசியலில் தன்னுடைய நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் கொள்ளாது முஸ்லிம் சமூகத்தினுடைய நன்மைகள் எல்லா கோணங்களிலும் எல்லா திசைகளிலும் பாதுகாக்கப்பட வேண்டும், அவ்வாறு முஸ்லிம்களுடைய பாதுகாப்பு பல திசைகளிலும் இருந்து பாதுகாக்கப்படுவதற்காக பல்வேறுபட்ட விமர்சனங்களுக்கும் மத்தியில் அவர் தன்னுடைய அரசியல் பயணத்தை மேற்கொண்டார்.
இன்று அல்லாஹுத் தஆலா அவருடைய பயணத்தை அங்கீகரித்து அவருடைய பாவங்களை மன்னித்து அவருடைய கப்ரை சுவர்க்கப் பூஞ்சோலையாக்க வேண்டும் என்றும் அவருடைய மறுமை வாழ்வுக்காக நாம் அனைவரும் பிராத்திப்போமாக- என அதில் கூறப்பட்டுள்ளது.