எம்.ஜே.எம்.முஜாஹித்-
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற Youth Got Talent வேலைத்திட்டத்திற்கமைவாக அக்கரைப்பற்று முஹம்மதியா கனிஷ்ட பாடசாலையில் றஹீமியா இளைஞர் கழகத்தினால் வாகன நிறுத்தும் இடத்திற்கான அடிக்கல் நாட்டு வைபவம் 2017.08.01ம் திகதி இன்று றஹீமியா இளைஞர் கழகத்தின் தலைவர் ஏ.ஜீ.எம்.ஆப்ரத் அலி அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இதில் உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எம்.தமீம், உதவிக்கல்விப் பணிப்பாளர் எச்.பௌஸ், பாடசாலையின் அதிபர் எம்.ஏ.எம். ஜாபீர், ,ளைஞர் சேவைகள் அதிகாரி எம்.எம்.சமிலுல்லிலாஹி, அக்கரைப்பற்று றஹிமியா விளையாட்டுக்கழகத்தின் செயலாளர் எல்.முஸாதிக் உட்பட பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களும் கலந்து கொண்டார்கள்.
இவ்வேலைத்திட்டமானது மொத்தம் மூன்று இலட்சம் ரூபாய் பெறுமதியுடைய வேலைத்திட்டமாகும்.