யாழ் ஒஸ்மானியா அதிபர் பதவிக்கான விண்ணப்ப முடிவு இன்று


பாறுக் ஷிஹான்-

யாழ் கல்வி வலயத்தில் உள்ள ஒஸ்மானியா கல்லூரி(பாடசாலை வகை 1 AB) அதிபர் பதவிற்கான விண்ணப்பம் கோரப்பட்ட நிலையில் இன்றுடன்(2) முடிவுத்திகதி நிறைவடைகின்றது.

கடந்த சில தினங்களிற்கு முன்னர் மேற்படி பாடசாலைக்கான அதிபர் வெற்றிடம் தொடர்பில் குடாநாட்டு முக்கிய ஊடகங்களில் விளம்பரம் ஊடாக வட மாகாண கல்வி அமைச்சு விண்ணப்பங்களை கோரி இருந்தது.

ஆனால் எதிர்பார்த்தளவு விண்ணப்பங்கள் இது வரை கிடைக்கவில்லை என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இவ்வதிபர் பதவிக்கு வட மாகாணத்தில் கடமையாற்றும் இலங்கை கல்வி நிர்வாக சேவை 111 ஐச் (பொது ஆளணி) சேர்ந்த உத்தியோகத்தர்களிடமிருந்தும் இலங்கை அதிபர் சேவை 1,2-1,மற்றும் 2-11 ஐச் சேர்ந்த உத்தியோகத்தர்களிடமிருந்தும் விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தது.

அடுத்து இலங்கை அதிபர் செவை வகுப்பு 1,2-1,ஐச் சேர்ந்த உத்தியோகத்தர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கிடைக்கப்பெறாத சந்தர்ப்பங்களில் மாத்திரம் இலங்கையின் அதிபர் சேவை வகுப்பு 2-11 ஐச் சேர்ந்தவர்கள் நேர்முகத் தேர்விற்கு அழைக்கப்பட்டிருந்தது.

விண்ணப்பிக்க விரும்புவோர் வலயக் கல்வி அலுவலகத்தில் விண்ணப்பங்களைப் பெற்று வலயக்கல்வி பணிப்பாளரின் சிபார்சுடன் 2017.08.02 ஆம் திகதிக்கு முன்னர் செயலாளர் கல்வி அமைச்சு வட மாகாணம் செம்மணி வீதி நல்லூர் யாழ்ப்பாணம் என்ற முகவரிக்கு பதிவுத் தபாலில் அனுப்பி வைக்குமாறு கேட்கப்பட்டிருந்தது.

முக்கியமாக மேற்படி பாடசாலை பாரம்பரியமாக முஸ்லீம் சமூகத்தவர்களின் பாடசாலையாக இருப்பதனால் விண்ணப்பிக்கும் விண்ணப்பத்தாரிகளின் முஸ்லீம் சமூத்தைச் சேர்ந்தவர்களிற்கு முன்னுரிமை வழங்கப்படும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -