ரவியின் நம்பிக்கையில்லா பிரேரனைக்கு சுதந்திரகட்சியின் 96 உறுப்பினர்களும் ஆதரவளிப்பர்.!



க.கிஷாந்தன்-
நாடாளுமன்றத்தில் முன்னாள் நிதி அமைச்சரும், தற்போதைய வெளிவிவகார அமைச்சருமான ரவி கருணாநாயக்க அவர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள நிதி மோசடி நம்பிக்கையில்லா பிரேரனைக்கு ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் 96 உறுப்பினர்களும் ஆதரவு வழங்கவுள்ளதாக முன்னாள் விளையாட்டுதுறை அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,

இன்று பாராளுமன்றத்தில் உள்ள ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்களில் அதிகமானோர் வாக்களிப்புக்கு சமூகமளிக்கப்போவதில்லை என்றும் எம்மிடம் பலர் தெரிவித்துள்ளனர். எனவே இந்த நம்பிக்கையில்லா பிரேரனையில் நிச்சயம் வெற்றிபெறுவதாகவும் அமைச்சர் ரவி கருணாநாயக்க அமைச்சர் பதவியிலிருந்து விலக வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

ஓன்றிணைந்த கூடடமைப்பின் புதுக்கட்சியான ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் கட்சிக்கு அங்கத்தவர்களை சேர்த்து கொள்ளும் கூட்டம் ஒன்று கினிகத்தேனை பீடாஸ் ஹோட்டலில் நடைபெற்றது. கூட்டம் முடிந்த பின், எமது ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கயிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -