சிலோன் முஸ்லிம் தலைமைக் காரியாலயம் தாக்கப்பட்டமைக்கு இம்போட்மிரர் பணிப்பாளர் கண்டனம்

சிலோன் முஸ்லிம் இணையத்தள தலைமை ஆசிரியர் பீட அலுவலகம் மீது இன்று அதிகாலை தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளமை ஊடகத்துறைக்கான அச்சுறுத்தலுடனான கேவலமான நடவடிக்கை என இம்போட்மிரர் ஊடக வலையமைப்பின் பிரதம நிறைவேற்றுப் பணிப்பாளரும் அம்பாரை மாவட்ட பொதுப்பணிகள் அமைப்பின் தலைவருமான எஸ்.எல்.முனாஸ் தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது:..

ஊடகம் என்பது தனிநபர் விருப்புக்கு ஏற்றால்போல் மட்டும் செயற்படும் ஒன்றல்ல அப்படித்தான் ஊடகவியலாளர்கள் நடந்து கொள்ள வேண்டும் என்று ஒருவர் விருப்புவதும் சரியானதல்ல. ஆனால் இன்று அதனைத்தான் பலரும் எதிர்பார்க்கின்றனர்.

தனக்கு அல்லது தான் சார்ந்த கட்சிக்கு அல்லது தனது ஆதரவாளருக்கு எதிராக ஒன்றைக் கூறும்போது அதனை அராஜகத்தின் மூலம் அடக்க நினைக்கின்றனர். முடக்க எத்தனிக்கின்றனர், தாக்க முற்படுகின்றனர். எனவே இந்த நிலமை மாறவேண்டும்.

இந்த நல்லாட்சியில் ஊடகத்துறைக்கு, ஊடகவியலாளர்களுக்கு பூரன சுதந்திரமான பாதுகாப்பு வழங்க வேண்டும். அரசு உத்தரவாதம் வழங்கவேண்டும். ஊடகவியலாளர்களைத் தாக்குவோர்கள் மீது கடுமையான தண்டனைமூலம் தடை செய்ய முற்படவேண்டும்.

இன்று ஊடகவியலாளர்கள் சிலர் ஒவ்வொரு அரசியல்வாதியின் பக்கம் சார்ந்து நிக்கும் நிலை மாறியுள்ளமை சரியான பாதுகாப்பின்மையும் ஒரு காரணமாக நோக்கலாம். ஒவ்வொரு ஊடகவியலாளரும் ஒவ்வொரு கருத்தைக் கொண்டிருக்கலாம் ஆனால் துறை ஒன்றாகவே நோக்கப்படுகிறது. அதனால் ஊடகத்துறைக்கு உரிய இடத்தை அரசு வழங்கவேண்டும். அதர்காக அமைச்சு ஒன்றை உருவாக்கிவைத்தால் மாத்திரம்போதுமானதல்ல. அதன் பின்னணியிலுள்ள ஏனைய விடயங்களையும் சரியாக எடுத்தியம்பவேண்டும்.

பாதுகாப்பில்லாத காரணத்தினால் இன்று சில ஊடகவியலாளர்கள் ஊடகத்துறையை விட்டு ஒதுங்கியிருக்கிறார்கள். ஆகவே இந்த நல்லாட்சி ஊடகவியலாளர்கள் விடயத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டியது கட்டாயம் என்று கேட்டுக்கொள்வதுடன் ஊடகவியலாளர்களுக்கான பாதுகாப்பையும் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

இன்று தாக்கப்பட்டுள்ள சகோதர இணையத்தளமான சிலோன்முஸ்லிம் காரியாலயத்தின் தாக்குதலை நடாத்தியோர்கள் உடனடியாக கண்டுபிடிக்கப்பட்டு சரியான தண்டனை வழங்கப்படவேண்டும்.
அவ்வாறு தண்டனைகள் கடினமாகும் போதுதான் குற்றவாளிகள் இல்லாமலாக்கபப்டுவார்கள்.

எனவே நாட்டில் ஊடக சுதந்திரத்தை நிலைநாட்ட நல்லாட்சி அரசு சரியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என இம்போட்மிரர் ஊடக வலையமைப்பின் பிரதம நிறைவேற்றுப் பணிப்பாளரும் அம்பாரை மாவட்ட பொதுப்பணிகள் அமைப்பின் தலைவருமான எஸ்.எல்.முனாஸ் தனது கோரிக்கையுடனான கண்டனத்தில் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -