அல்-இல்மியா முஸ்லீம் மகா வித்தியாலயம் (வெல்பொதுவெவ) வடமேல் மாகாணத்தில் முதலிடம்

2016 இல் இடம்பெற்ற க.பொ.த உயர்தரப் பரீட்சையில் வெல்பொதுவெவ அல்-இல்மியா முஸ்லீம் மகா வித்தியாலயம்
வடமேல் மாகாண பாடசாலைகளுக்கிடையே முதலிடமும், விஞ்ஞானப்பிரிவு அற்ற பாடசாலைகளில் 65 புள்ளிகளைப்பெற்று அகில இலங்கை ரீதியில் 11வது இடத்தினையும் பெற்றுள்ளது.

2016 இல் இப்பாடசாலையில் கல்வி பயின்ற மாணவர்களில் 56 பேர் பல்கலைக்கழகங்களுக்கு தெரிவானதுடன், 12 மாணவர்கள் 3A சித்தியினையும் பெற்றுள்ளனர்.

அல் இல்மியா மகாவித்தியாலயம் கஸ்டப்பிரதேச பாடசாலையாக காணப்படுவதுடன் குறைவான பொதீக வளங்களை மட்டுமே கொண்டு கல்வி ஒளி வீசுகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

இப்பாடசாலையில் 16 வரையான பாடங்கள் கலைப்பிரிவுக்கு தெரிவுப் பாடங்களா காணப்படுவதோடு பாடசாலை மாணவர்கள் புவியியல், வரலாறு ஆகிய பாடங்களில் மாகாண ரீதியில் அதிகூடிய A சித்தியினைப் பெற்றுள்ளதுடன் வணிகப்பிரிவும் சிறப்பாக இங்கு முன்னெடுக்கப்பட்டு வருகின்ற அதே வேலை இப் பாடசாலையின் அபிவிருத்திப் பாதையின் நவீன முன்னோடியான அதிபர் எம்.எஸ்.எஸ் முஸ்தபா அவர்களோடு, ஆசிரியர் குழாம், பழைய மாணவர்கள்,பெற்றோர்கள் மற்றும் நலன் விரும்பிகள் என பலர் கைகோர்த்து செயல்படுகின்றனர்.

ஏ.எச்.எம் றிழ்வான்
பழைய மாணவன்
அல் இல்மியா மு.ம.வி
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -