லீடர் அஷ்ரஃப் ஞாபகார்த்த வெற்றிக் கிண்ணம் நிந்தவூர் றியல் இம்ரான் கழகம் வச­மா­ன­து

















ல்­மு­னையில் விளை­யாட்டு மைதா­னமொன்றை தெரி­வு­செய்து, இரவு நேரத்தில் விளை­யா­டக்­கூ­டி­ய­தாக அதற்கு மின்­னொளி வச­தி­களை ஒரு வரு­டத்­துக்குள் ஏற்­ப­டுத்­தி தரு­வதாக ஸ்ரீ­லங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தலை­வ­ரும் அமைச்­ச­ரு­மான ரவூப் ஹக்கீம் நேற்றிர­வு (09) சாய்ந்­த­ம­ருதில் நடை­பெற்ற கிரிக்­கெட் போட்டி பரி­ச­ளிப்பு விழாவில் தெரி­வித்­தார்.

அதே­வேளை, கல்­முனை கடற்­கரைப்பள்ளி தொடக்கம் சாய்ந்­த­ம­ருது பூங்கா வரை­யான கடற்­கரைப் பிர­தே­சத்தை விரைவில் அபி­வி­ருத்தி செய்­ய­வுள்­ள­தா­கவும், அதற்­கா­ன ஒதுக்­கீ­டுகள் அம்­பாறை மாவட்ட செய­லா­ள­ருக்க அனுப்­பி­வைக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் மேலும் தெரி­வித்­தார்.

சாய்ந்தமருது டஸ்கர்ஸ் விளையாட்டுக் கழகத்தின் 5ஆவ­து ஆண்டு நிறைவை முன்னிட்டு அர்ஷாத் காரியப்பர் பௌண்டஷன் பிரதான அனுசரணையில் நடைபெற்ற 'லீடர் அஷ்ரஃப் ஞாபகார்த்த வெற்றிக் கிண்ணம் 2017' இரவுநேர மின்னொளி மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் இறுதிப் போட்டி நிகழ்வு நேற்று (09) ஞாயிற்றுக்கிழமை சாய்ந்தமருது பௌசி ஐக்கிய விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தவிசாளர் ஏ.எல். அப்துல் மஜீத் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதம அதிதியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் கலந்­து­கொண்­டார்.

அணிக்கு 7 பேர் கொண்ட 5 ஓவர் மட்டுப்படுத்தப்பட்ட இச்சுற்றுப்போட்டியின் அரையிறுதி போட்டியில் கல்முனை லெஜென்ஸ் விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து ஒலுவில் லோயல் விளையாட்டுக் கழகமும், அக்கரைப்பற்று யூத் ஸ்டார் விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து நிந்தவூர் றியல் இம்ரான் விளையாட்டுக் கழகமும் விளையாடியது. இதில் கல்முனை லெஜென்ஸ் விளையாட்டுக் கழகமும் நிந்தவூர் றியல் இம்ரான் விளையாட்டுக் கழகமும் இறுதிப்போட்டிக்கு தெரிவான­து.

இறுதிப் போட்டியின் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற கல்முனை லெஜென்ஸ் விளையாட்டுக் கழகம் முதலில் துடுப்பெடுத்தாடி சகல விக்கெட்டுகளையும் இழந்து 23 ஓட்டங்களைப் பெற்றது. 24 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நிந்தவூர் றியல் இம்ரான் விளையாட்டுக் கழகம், விக்கட் இழப்பின்றி 2 ஓவர்கள் நிறைவில் 24 ஓட்டங்களைப் பெற்று வெற்றிபெற்றது.

இப்போட்டியில் வெற்றிபெறும் அணிக்கு கடின பந்து விளையாட்டு உபகரணங்களும் இரண்டாவது இடத்தைப் பெறும் அணிக்கு மென்பந்து விளையாட்டு உபகரணங்களும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் ஹரீஸினால் வழங்­கப்­பட்­ட­ன.

வெற்றிபெற்ற அணிக்கு அமைச்சர் ரவூப் ஹக்கீம் 50 ஆயிரம் ரூபா பணப்பரிசு உள்ளிட்ட வெற்றிக் கிண்ணத்தையும், இரண்டாமிடம் பெற்ற அணிக்கு அமைச்சர் 25 ஆயிரம் ரூபா பணப்பரிசு உள்ளிட்ட கிண்ணத்தையும் வழங்கிவைத்­தார். அது­போ­ல வெற்றிபெறும் அணிக்கு கடின பந்து விளையாட்டு உபகரணங்களும் இரண்டாமிடம் பெற்ற அணிக்கு மென்பந்து விளையாட்டு உபகரணங்களும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் ஹரீஸினால் வழங்­கப்­பட்­ட­ன.

இப்போட்டியின் ஆட்ட நாயகன் விருது நிந்தவூர் றியல் இம்ரான் விளையாட்டுக்கழக வீரர் அர்சாத்கானுக்கு வழங்கப்பட்டது. இச்சுற்றுப்போட்டியின் தொடர் ஆட்ட நாயகன் விருது நிந்தவூர் றியல் இம்ரான் விளையாட்டுக் கழக அணித் தலைவருக்கு வழங்கப்பட்டது.

இந்­நி­கழ்வில் கௌரவ அதிதியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ், விஷேட அதிதிகளாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம். நசீர், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன், ஏ.எல். தவம், முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் உயர் பீட உறுப்பினர்களான ஏ.சி. யஹியாகான், உளவளத்துறை வைத்திய ஆலோசகர் அர்சாத் காரியப்பர், கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினர்களர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -