பொறியியலாளர் ஷிப்லி பாறுக்கினால் நாவற்குடா தருமரெத்தினம் வித்தியாலயத்திற்கு ஆசிரியர் தளபாடங்கள் வழங்கி வைப்பு

எம்.ரீ. ஹைதர் அலி-

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக்கின் 2016ஆம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டிலிருந்து மட்-நாவற்குடா தருமரெத்தினம் வித்தியாலயத்திற்கு ஐம்பதாயிரம் ரூபா பெறுமதியான ஆசிரியர் தளபாடங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு 2017.07.05ஆந்திகதி - புதன்கிழமை நடைபெற்றது.

நாவற்குடா தருமரெத்தினம் வித்தியாலயத்தின் அதிபர் உதயகுமார் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்டு வழங்கி வைத்தார்.

வறிய மாணவர்களின் கல்வியினை மேம்படுத்தும் நோக்கில் இன, மத பேதமற்ற முறையில் தேவையுடைய, பின்தங்கிய பிரதேசங்களை மையப்படுத்தியதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் அவர்கள் தனது சொந்த நிதியினூடாகவும், தனது மாகாண சபை நிதி ஒதுக்கீடுகளினூடாகவும் தொடர்ச்சியாக இத்தகைய பல்வேறுபட்ட பாடசாலை அபிவிருத்தி சார்ந்த வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும் இந்நிகழ்வில் பாடசாலையின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -