
நல்லாட்சி அரசு புத்த பெருமானை விட ஞானசார தேரருக்கு மதிப்பளிப்பதாக முன்னாள் ஜானதிபதி மஹிந்த ராஜபக்ஷகுறிப்பிட்டார். கடந்த வாரம் ஶ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் அமைப்பு அவரை சந்தித்து அல்குர்ஆன் சிங்கள பிரதி ஒன்றை கையளித்த போதுகடந்த காலத்திலும் சமகாலத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெற்ற விடயங்கள் தொடர்பில் அங்குகலந்துரையாடப்பட்டது.
அங்கு கடந்த ஆட்சியில் இடம்பெற்ற அலுத்கமை உள்ளிட்ட சில சம்வங்கள் தொடர்பில் கூறுபவர்கள் வடக்கு கிழக்கில்முஸ்லிம்களுக்கு தான் செய்த அளபரிய சேவைகளைப் பற்றி யாரும் நினைவு கூறுவது இல்லை என முன்னாள்ஜனாதிபதி குறிப்பிட்டார்.
கிண்ணியா மூதூர் உள்ளிட்ட பல பிரதேசங்களில் விடுதலை புலிகளால் முஸ்லிம்களுக்கு நிகழ்ந்த கொடுமைகள் பற்றிஎடுக்காட்டிய முன்னாள் ஜனாதிபதி அலுத்கமை சம்பவத்தை அந்த சம்பவத்தோடு கட்டுப்படுத்தியதாக குறிப்பிட்டார். இந்த நல்லாட்சியின் முக்கியஸ்தர்களே அலுத்கமை சம்பவத்திம் சூத்திரதாரிகள் என கூறிய அவர் அதனால் தான் அதற்குஎதுவித நீதி நடவடிக்கையும் இந்த அரசு எடுக்கவில்லை என கூறினார்.
உங்கள் ஆட்சியில் புத்த பெருமானை அவமதித்து கருத்து கூறியதாக குற்றம்சாட்டப்பட்ட அப்துர் ராசிக்குக்கு பிணைவழங்கப்பட்டது ஆனால் நல்லாட்சியில் ஞானசார தேரரை அவமதித்தாக அப்துர் ராசிக்குக்கு ஒரு மாதம்விளக்கமறியலில் வைக்கப்பட்டார் என குறித்த கலந்துரையாடலில் கலந்துகொண்ட ஒருவர் குறிப்பிட நால்லாட்சிக்கு புத்த பொருமானை விட ஞானசார தேரர் பெரியவர் என புன்னகைத்தவாரே மஹிந்த ராஜபக்ஸகுறிப்பிட்டார்.
