இனத்துவேசம் கொண்ட அரசியல் வாதிகளே மக்களின் உணர்வுகளை தூண்டுகின்றனர் - றிப்கான் பதியுதீன்

ன்னாரில் இன்று நடாத்தப்பட்ட பாலர் பாடசாலை மாணவர்களுக்கான விளையாட்டு நிகழ்விற்கு பிரதம விருந்தினராக வடமாகாண சபை உறுப்பினரும் பிரதம எதிர்க்கட்சி கொறடாவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் உயர்பீட உறுப்பினருமான றிப்கான் பதியுதீன் அவர்கள் கலந்து சிறப்பித்தார்கள்.

நிகழ்வில் உரையாற்றிய வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் அவர்கள்;

"மாணவர்கள் என்பவர்கள் சிறந்த தலைவர்கள் அந்த தலைமைத்துவ பண்பினை மாணவர்களிடையே கொண்டுவருவது ஒவ்வொரு ஆசிரியர்களது கடமையாகும். கல்வியானாலும் சரி ஒழுக்கமானாலும் சரி விளையாட்டு திறனானாலும் சரி இவை அனைத்தும் வெளிக்கொண்டுவர வேண்டிய கடமை ஆசிரியர்களுக்கு மாத்திரமல்ல பெற்றோர்களினதும் கடமையாகும் இன்று எமது வடபுலத்தை பார்ப்போமானால் சிறுபான்மை இனமான தமிழ் மற்றும் முஸ்லீம் மக்களிடையே சில கருத்து முரண்பாடுகள் இடம்பெறுகின்றது. 

இதற்கு காரணம் அப்பாவி மக்களை இனத்துவேசம் கொண்டு தூண்டி விடும் அரசியல் வாதிகளே இவ்வாறான அரசியல் வாதிகள் மக்களின் உணர்வுகளை தூண்டி அதில் இனங்களுக்கிடையேயான முறைகளை ஏற்படுத்துவதன் அடிப்படை காரணம் அவர்களின் பள்ளிப் பருவத்தில் ஒழுக்கம் ஒற்றுமை போன்றவற்றை ஒழுங்கான முறையில் கடைபிடிக்காமல் இருப்பதாகவே நான் கருதுகிறேன்.  எனவே இவ்வாறான இனத்துவேசமான சமூக ஒற்றுமைகளை சீர் குலைக்கும் வண்ணம் எமது குழந்தைகளை உருவாக்காமல் ஒரே நாடு ஒரே மக்கள் என்னும் கொள்கையுடன் நாம் சிறந்த ஒழுக்கமான குழந்தைகளை உருவாக்க வேண்டும் "

என தெரிவித்தார் மேலும் இந்நிகழ்வின் வலயக்கல்வி பணிப்பாளர் சுகந்தி மன்னார் மறை மாவட்ட குறு முதல்வர் விக்டர் சூசை மற்றும் அமைச்சரின் இணைப்பாளர் முஜாஹிர் ஆகியோரும் கலந்தது சிறப்பித்தனர்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -