மு.இராமசந்திரன்-
ஹட்டன் சாமிமலை பிரதான வீதியில் மரத்தூள் ஏற்றிச்சென்ற கனரக வாகணம் குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதாக நோர்வுட் பொலிஸார் தெரிவித்தனர். குருநாகலையிலிருந்து சாமிமலை கவரவில தோட்டத்திற்கு மரம்தூல் ஏற்றிச்சென்ற கணரகவாகணம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நோர்வூட் தோட்டப்பகுதியிலே 25.07.2017 மதியம் 1. மணியளவிலே பாதையிலிருந்து விலகி தேயிலை மலையில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளானது.
அதிக வேகமாக எதிரே வந்த முச்சக்கரவண்டிக்கு இடம் கொடுக்க முற்றப்பட்ட போதே பாதையை விட்டு விலகி விபத்து சம்பவித்துள்ளதாகவும் யாருக்கும் பதிப்புகள் இல்லையென்றும் நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.