ஒரு சிறந்த அரசியல் ஞானியை முஸ்லிம் சமூகம் இழந்துள்ளது - கிழக்கு முதலமைச்சர்

ற்போது நாட்டில் புதிய அரசியலமைப்பின் உருவாக்கத்திற்கான முஸ்தீபுகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் கிழக்கு மாகாணத்தின் முதலாவது அமைச்சரவை அந்தஸ்து பெற்ற அமைச்சரான ஏ ஆர் மன்சூரின் மறைவு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும் என கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்துள்ளார்.

சட்டத்தரணி, அரசியல்வாதி மற்றும் இராஜதந்திரி என பல்வேறு பரிணமாங்களை தன்னகத்தே கொண்ட ஏ ஆர் மன்சூர் அவர்கள் இன்றைய சூழ்நிலையில் முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கியுள்ள பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வுகளைப் பெற்றுக் கொடுப்பதற்கான பயணத்தில் ஆலோசனைகளையும் வழிகாட்டல்களையும் வழங்கக் கூடிய ஆளுமையை முஸ்லிம் சமூகம் இழந்துள்ளதாக கிழக்கு முதலமைச்சர் கூறினார்,

கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

வர்த்தக வாணிப கப்பற்துறை அமைச்சராக ஏ ஆர் மன்சூர் அவர்கள் பதவி வகித்த காலப்பகுதியில் அவர் மேற்கொண்ட அபிவிருத்திப் பணிகள் இன்றளவும் மக்கள் உள்ளங்களில் அவர் பெயர் சொல்லும் படியாக அமைந்திருக்கின்றது என்பதை யாராலும் மறுக்க முடியாது, அத்துடன் இன மத மொழி வேறுபாடின்றி தொழில்வாய்ப்புக்களையும் வழங்கி இனவாதமற்ற அரசியல் கலாசாரத்திற்கு உதாரணமாக முன்னாள் அமைச்சர் ஏ ஆர் மன்சூர் திகழ்ந்தார்.

பிற்பட்ட காலப்பகுதிகளில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் இணைந்து செயற்பட்டு வௌிநாடுகளில் இராஜதந்திரியாக கடமையாற்றிய காலப்பகுதியில் கூட தமது மக்களின் அபிவிருத்திக்கு பாரிய நிதிகளை சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்புடன் கொண்டு வந்து சேர்த்திருந்தார் என்பதை சுட்டிக்காட்ட வேண்டும், அன்னாரது அரவணைப்பிலும் அறிவுரைகளையும் கேட்டு வளர்ந்த முன்னாள் ஏ ஆர் மன்சூரினது புதல்வரான ரஹ்மத் மன்சூர் அவர்கள் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீர் வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சருமான ரவூப் ஹக்கீமினது இணைப்பு செயலாளராக இருந்து தமது மக்களுக்கு தந்தையின் பாணியில் சேவையாற்றிவருகின்றார், தற்போது அன்னாரின் மறைவில் துயருற்றிருக்கும் ரஹ்மத் மன்சூர் மற்றும் அவரது குடும்பத்தினரின் துயரில் பங்குகொள்வதுடன் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

முன்னாள் அமைச்சர் மர்ஹும் ஏ ஆர் மன்சூர் அவர்களை எல்லாம் வல்லா அல்லாஹ் பொருந்திக் கொள்வதுடன் ஜன்னதுல் பிர்தவ்ஸ் எனும் மேலான சுவர்க்கத்தை வழங்குவானாக.
ஆமீன்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -