மார்க்கமா மன இச்சையா..?

மார்க்கமா மன இச்சையா
++++++++++++++++++++++

ஆமந்து பில்லாஹியை
அடகுக்கு வைத்தேனும்
சீமெந்து கல்வாங்கி
சீக்கிரம் மாடி கட்டவேண்டும்

குர் ஆன் போதனையை
குர்பான் கொடுத்தேனும்
பெருமளவில் லைக்ஸ் வாங்கி
பேமஸ் ஆக வேண்டும்

இட்டுக் கட்டிய ஹதீஸை
எடுத்துக் காட்டியேனும்
மட்டம் தட்ட வேண்டும்
மற்ற இயக்கத்தவரை

கழாவாய்த் தொழுதேனும்
ஹறாத்தை செய்தேனும்
விழாவில் கலந்து கொண்டு
விருதினை வாங்க வேண்டும்

இஸ்லாத்துக்கு கொஞ்சம்
இண்டவெல் கொடுத்து விட்டு
பிஸ்னஸை முன்னேற்ற
பித்தலாட்டம் செய்ய வேண்டும்

ரொக்கம் வருமென்றால்
ரொம்ப இலேசாக
தக்வாவை தள்ளி வைத்து
தன் பாட்டில் ஆட வேண்டும்

அறுபது தாண்டியபின்
ஆறுதலாய் அமர்ந்து
அறுந்து போன மார்க்கத்தை
அருமையாய் தைக்க ஏலும்

என்ற கொள்கைகளில்
இருக்கின்றார் பல பேர்கள்
ஒன்றை மறந்து விட்டார்
ஒவ்வொரு பாவங்களும்

வாழுகின்ற வாழ்க்கையின்
வசந்தத்தை அரித்து விடும்
போலி இன்பம் தந்து
பொசுக்கி விடும் நிம்மதியை.

மார்க்கத்தை வீசி விட்டு
மற்றவற்றைப் பெரிதாக்கும்
வாழ்க்கையின் உள் பக்கம்
வரட்சியும் கவலையுமே.
-முகம்மட் நிழூஷ்-
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -