இராஜாங்க அமைச்சினால் திருமலை மாவட்டத்துக்கு 20 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு.!

ஆர்.ஹஸன்-
புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சின் 2017ஆம் ஆண்டுக்கான விசேட நிதி ஒதுக்கீட்டில் திருகோணமலை மாவட்டத்துக்கு 20 மில்லியன் ரூபா நிதி 38 வேலைத்திட்டங்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் மீள்குடியேற்றம் செய்யப்பட்டும் - செய்யப்படாமலும் இருக்கின்ற பகுதிகளின் அபிவிருத்திப் பணிகளுக்காக மேற்படி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், திருகோணமலை மாவட்ட மக்கள் பிரநிதிகளின் திட்ட மும்மொழிவுகளுக்கு அமைய 38 வேலைத்திட்டங்கள் இதன் மூலம் நடைமுறைப்படுத்தவுள்ளதாகவும் குறிப்பிட்டார். 

இதற்கமைய, மூதூர், தம்பலகாமம், கந்தலாய், வேருகல், குச்சவெளி, கிண்ணியா, தோப்பூர் உள்ளிட்ட பல பகுதிகளில் பாடசாலை அபிவிருத்தி, குழாய் நீர் கிணறுகள், வீதி அபிவிருத்தி என பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -