போராட்டம் உண்ணாவிரதமின்றி மத்திய மாகாண பட்டதாரி ஆசிரியர் நியமணம் கிடைத்துள்ளது
நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன் -

ட்டதாரி ஆசிரியர் நியணத்தை பெற்றோர் எதிர்காலத்தில் எத்தனை பட்டதாரிகளை உறுவாக்க போகின்றீர்கள் என்பதே எமது எதிர்பார்பாக அமைந்துள்ளது.

போராட்டம். உண்ணாவிரதமின்றி மத்திய மாகாணத்திற்கு பட்டதாரி ஆசிரியர் நியமணம் கிடைத்துள்ளமை எமது அரசியல் சாணக்கியம் என மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சர் மருதபாண்டி ராமேஸ்வரன் தெரிவித்தார்

மத்தியமாகாண தமிழ் மொழி பட்டதாரி ஆசிரியர்களுக்கான நியமணக்கடிதம் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் பேதே இவ்வாறு தெரிவித்தார்

742 தமிழ்மொழி பட்டதாரி ஆசிரியர்களுக்கான நியமணக்க கடிதம் வழங்கும் நிகழ்வு கண்டி விஜயராம கல்லூரி பிரதான மண்டபத்தில் 06.07.2017நடைபெற்றது

மத்திய மாகாண ஆளுனர் நிலூக்கா ஏக்க நாயக்க தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க மத்தியமாகாண தமிழ் கல்வி அமைச்சர் மருதபாண்டி ராமேஸ்வரன் மத்திய மாகாணசபை உறுப்பினர்கள் கல்வி அதிகாரிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர் இங்கு அமைச்சர் தொடர்ந்து உரையாற்றுகையில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் பட்டதாரிகள் உண்ணாவிரமும் போராட்டங்களும் நடத்தி வருகின்றனர் ஆனால் மத்திய மாகாணத்தில் எவ்வித போராட்டமும் இன்றி பட்டதாரி அசிரியர் 742 பேருக்கு நியமணம் கிடைத்துள்ளது கடந்தகாலத்தில் ஆசிரியர் நியணங்கள் வழங்கப்பட்டபோதிலும் இன்றைய நாள் வரலாற்று முக்கியமாணது எமது அரசியல் பலத்தினாலும் சாணக்கியதாலும் மலையக சமூக கல்வி வளர்ச்சிக்கு கிடைத்த சிறந்த சந்தர்ப்பமாக இன்றை பட்டதாரிகளின் ஆசிரியர் நியமத்தினூடாக நாங்கள் எதிர்பார்ப்பது நீங்கள் எதிர்காலத்தில் எத்தனை பட்டதாரிகளை உறுவாக்க போகின்றீர்கள் என்பதே எமது எதிர்பார்பாக உள்ளது 2000 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர் கோரியே அமைச்சரவை பத்திரத்தை தாக்கல் செய்தோம் ஆனால் விண்ணப்பங்கள் 742 மட்டுமே கிடைக்கப்பெற்றது இதில் அரசியல் பாகுபாடின்றி வழங்கப்பட்டுள்ளது இந்த நியமத்திற்கான மத்தியமாகாண முதலமைச்சர் மற்றும் ஆளுனர் அமைச்சர்களின் பங்களிப்பு சிறபானது கிடைக்கப்பெற்ற இந்த சந்தர்பத்தினூடாக சிறந்த சமூகத்தை உறுவாக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -