37 வருடங்களுக்கு முன்பு இறக்காமம், வரிப்பத்தான்சேனை பகுதியில் இடம்பெற்ற இனத்துவேசமும் இனச்சுத்திகரிப்பும்

ண்மைக்காலமாக இறக்காமம் வரிப்பத்தன்தான்சேனை பகுதியில் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர்களின் இனத்துவசத்தின் உச்சகட்டமாக சிலை வைப்புகளும் காணி அபகரிப்புகளும் அவ்வப்பகுதியில் அவ்வப்போது இடம்பெற்று வருகின்றது. இதுபோன்ற இனசுத்திகரிப்பின் உச்சகட்டமாக முஸ்லிம்களின் பூர்வீகமான இடங்கள் அன்று அடாவடித்தனமாக அபகரிக்கப்பட்டு அவர்களை எல்லாம் வெளியேற்ற முற்பட்டனர்.

இந்நிகழ்வு சுமார் 37 (1980ம் வருடம்) ஆண்டுகளுக்கு முன்பு இடம்பெற்ற போது எவ்வித அரசியல் அதிகாரமும் இல்லாத நிலையில் தனி மனிதனாக தனித்து நின்று தடுத்து நிறுத்தி நீதிமன்ற கட்டளைகளை பெற்று அதன் மூலம் இவர்களுக்கு எல்லாம் நிவாரணமும் நிம்மதியும் பெற்றுக் கொடுத்த பெருமை எப்பதவியும் இல்லாத நிலையில் முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் பொதுச்செயலாளர் சட்டத்தரணி எஸ்.எம்.ஏ. கபூர் அவர்களைச்சாறும். அதற்கான ஆதரமாக அன்றைய நாட்களில் வெளியான தினபதி (22.1980) பத்திரிகைச் செய்தி இதற்கு ஆதாரமாக இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது என்பதை 'இன்றைய இவர்கள்' எல்லாம் அறிவார்களா?

விளையும் பயிரை முளையில் தெரியும் என்பதற்கிணங்க அன்று முளையாக இருந்த இளம் சட்டத்தரணி கபூர் அவர்கள் இன்றைய நிலையில் இவ்வாறான சவால்களுக்கு அன்றும் இன்றும் என்றும் இதுபோன்ற பல பிரச்சினைகளுக்கு நீதிமன்றங்கள் மூலம் முகங்கொடுத்து வெற்றி பெற்று வந்துள்ளார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -